‘நாரி சக்தி’ ‘மாத்ரு வந்தனம்’ என்ற பசப்புப் பேச்சின் அவலம்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அரசியல், இந்தியா, தமிழ்நாடு
1. வீட்டு வேலைக்காரப் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட பெண்கள் பிரிஜ்வல் ரேவண்ணாவின் கோரப்பசிக்கு இரையாகி உள்ளனர். இவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தது யார்?
2.. இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்றுத்தந்த வீராங்கனைகளை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்பூசன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவரது மகனுக்கு காஷ்கன்ஞ் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது யார்?
3. பாலியல் வன்கொடுமைக் குற்றவாளி குல்தீப் சிங் செங்கார் மனைவிக்கு கட்சியின் முக்கிய பொறுப்பைக் கொடுத்தவர் யார்?
4 பில்கீஸ்பானு குற்றவாளிகள் வழக்கில் நேரடியாக குஜராத் சிறைத் துறைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகள் விடுதலைக்கு வித்திட்டவர் யார்?
இது எல்லாம் நேரடியாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து சென்ற ஆணையால் நடந்தது என்று ஊடங்களில் சான்றுகளோடு வந்த தகவல்கள்!
இவர் தான் ‘நாரி சக்தி’ (பெண்கள் சக்தி) ‘மாத்ரு வந்தனம்’ (பெண்களை வணங்குவோம்) ‘பேட்டி பச்சாவ் பேட்டி படாவ்’ (பெண் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள், படிக்கவையுங்கள்) என்று 10 ஆண்டுகளாக முழங்கிக் கொண்டு வந்தார்.
தெரிந்து கொள்வீர்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *