மகாராட்டிராவில் சோக சம்பவம்; அனுமன் கோயில் மண்டப கூரை இடிந்து விழுந்து 5 பக்தர்கள் உயிரிழப்பு: 20–க்கும் மேற்பட்டோர் காயம்

1 Min Read

சத்ரபதி சம்பாஜி நகர், ஜூன் 21 மகாராட்டிராவில் உள்ள அனுமன் கோயிலில் மண்டப கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் 5 பக்தர்கள் உயிரிழந்தனர். 20–க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராட்டிரா மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள யாஷ்வாடி கிராமத்தில் அனுமன் கோயில் ஒன்றில் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இந்தக் கோயில் சத்ரபதி சம்பாஜி நகரில் இருந்து கிட்டத்தட்ட 190 கிமீட்டர் தூரத்தில் பர்பானி-மன்வாட் சாலையில் அமைந்துள்ளது. கோயிலில் கட்டுமானப் பணி ஒருபுறம் நடந்துவந்தாலும், வழி பாடு செய்வதற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று (20.6.2026) என்பது அனுமன் வழிபாட்டிற்கு உகந்த நாள் என்பதால்,  கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பிற்பகல் 3.30 மணியளவிலி சபா மண்டபத்தின் கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் 20–க்கும் மேற்பட்ட பக்தர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதுபற்றி அங்கிருந்தவர்கள் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு படையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி யில் ஈடுபட்டனர். அதில் 5 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த தால், அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 20–க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்து மனைகளில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் சந்தோஷ் கடடே (மந்தா), ஆகாஷ் சுர்துசே (பர்பானி), முனேஷ் அகர்வால் (26, ஜின்டூர்), சூரஜ் போபட்கர் (20, மன்வாட்) மற்றும் சிறீகிருஷ்ணா கவாரே (38, வத்வானி-பீட்) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தச் சம்ப வம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பக்தர்களின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் பட்நவிஸ், குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *