பிறந்த குடும்பத்தில் இருந்து திருமணமான பெண்களை விலக்குவது நியாயமல்ல : உச்சநீதிமன்றம் கருத்து

புதுடில்லி, ஜூன்.3- திருமணமான பெண் களை அவர்கள் பிறந்த குடும்பத்தில் இருந்து விலக்குவது நியாயமல்ல என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த திருமணமான ஒரு பெண், தனது தந்தை நியாய விலைக்க டையில் பணியாற்றி இறந்து விட்டதால், கருணை அடிப்ப டையில் அந்த பணியை தனக்கு அளிக்குமாறு விண்ணப்பித்தார். ஆனால், மாநில அரசு அவருக்கு அப்பணியை அளிக்க மறுத்து விட்டது. திருமண மான பெண்களை ‘குடும்பம்’ என்ற வரையறைக்குள் சேர்க்க முடியாது என்று கூறிவிட்டது. அதை எதிர்த்து அப்பெண் அலகா பாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆயி னும், கருணை அடிப்படையில் வேலை அளிக்க ‘குடும்பம்’ என்ற வரை யறைக்குள் திருமணமான பெண்களை சேர்க்க முடியாது என்று கூறியது.

அந்த உத்தரவை எதிர்த்து அந்த பெண் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அம்மனு, நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, அலோக் அரதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (2.6.2026) விசாரணைக்கு வந்தது.

அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:- ‘கருணை அடிப்படையிலான பணி ஒதுக்கீடு’ என்பது, மறைந்த ஊழியரின் குடும் பத்துக்கு உடனடியாக நிதியுதவி செய்வதற்குத்தான். எனவே, திருமண மான பெண்களை ‘குடும்பம்’ என்ற வரையறைக்குள் சேர்க்க மறுப்பது ஏற் புடையதல்ல.  குறிப்பிட்ட பணியை செய்யும் திறன், இருப்பிடம், நிதி தேவை, குடும்பத்தை சேர்ந்தவர் ஆகிய அம்சங்களைத்தான் பரிசீலிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, திருமணத் தகுதி என்பதற்கும், இந்த அம்சங்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. திருமணமானவுடன் மகளுக்கும், அவரது பிறந்த குடும்பத்துக்கும் இடையிலான பந்தம் அறுபடும் என்று நினைப்பது சரியல்ல. திருமணமானவுடன் அவர் அந்த குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல என்று நினைப்பது அரசியல் சாசனரீதியாக அனுமதிக்கத்தக்கது அல்ல.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *