த.வெ.க.-வில் இணைந்த முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேர் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!

புதுடில்லி, ஜூன் 10- அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில் இணைந்த இசக்கி சுப்பையா, ஜெயக்குமார், சத்தியபாமா மற்றும் மரகதம் குமரவேல் ஆகிய 4 பேரும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

முன்னதாக, தங்கள் பதவி யிலிருந்து விலகிய இந்த 4 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் சிபிஅய் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதி மன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும், வரவிருக்கும் இடைத்தேர்தலில் இவர்கள் நால்வரும் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று வழக்குரைஞர் சீனிவாசன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

வழக்குரைஞர் சீனிவாசன் தொடர்ந்த இந்த வழக்கில், தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் உச்சநீதிமன்றம் எந்தவொரு இடைக்கால உத்தரவையும் பிறப்பித்துவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதற்காக, இந்த 4 முன்னாள் எம்எல்ஏ-க்களும் தற்போது உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *