புவனேசுவர், மே 26 ஒடிசா மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சியான பிஜூ ஜனதா தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் தலை வரும், முன்னாள் முதல மைச்சருமான நவீன் பட்நாயக்கின் மிக நெருங் கிய கூட்டாளிகளில் ஒருவ ரான மாநிலங்களவை உறுப்பினர் தேபாஷிஷ் சமந்தராய், தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.
பதவி விலகல்
கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்தும், மாநி லங்களவை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ள தேபாஷிஷ் சமந்தராய், பிஜூ ஜனதா தளத்தில் தான் தொடர்ந்து அவ மதிக்கப்பட்டு வந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். கட்சிக்குள் ஏற்பட்ட இந்த மனக்கசப்பு காரணமாகவே தான் இந்த கடுமையான முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை விட்டு விலகியதற்கான கடிதத்தை, மாநிலங்களவை தலைவரான சி.பி. ராதா கிருஷ்ணனை நேரில் சந்தித்து அவர் வழங்கினார்.
பதவி விலகல் குறித்துப் பேசிய தேபாஷிஷ் சமந் தராய்: “நான் பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளேன். இது தொடர் பாக அக்கட்சியின் மூத்த தலைவர்களுடன் நடத்தப் பட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடி வடைந்து விட்டது.” என்றார்.
அவர் விரைவில் அதி காரப்பூர்வமாக பாஜகவில் இணைவதற்கான ஏற் பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாற்றம் ஒடிசா அரசி யல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.
