அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி அறிவிப்பு வளைகுடாவில் உச்சக்கட்ட பதற்றம்!

2 Min Read

தெஹ்ரான், ஜூலை 19- அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் விமானங்களைத் தாக்கி அழித்துள்ளதாக ஈரான் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு வளைகுடாப் பகுதியில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் பன்னாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி, வணிக எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக, அமெரிக்க ராணுவம் கடந்த 6 நாள்களாக ஈரானின் பல்வேறு பகுதிகள் மீது கடுமையான வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

நேற்று முன்தினம் (17.7.2026) அமெரிக்கா நடத்திய கொடூரத் தாக்குதலில், ஈரானின் முக்கிய நகரமான ‘பந்தர் அப்பாஸ்’ பகுதியில் இருந்த பாலங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மின் நிலையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டன. மேலும், ‘ஈரான்ஷர்’ ராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இதில் ஈரானின் 3 ஏவுகணைகளை நடுவானி லேயே தடுத்து அழித்ததாக ஜோர்டான் நாடு தெரிவித்துள்ளது.

ஈரான் ராணுவத்தின்
அதிகாரப்பூர்வ அறிக்கை

இந்நிலையில், ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ள தற்போதைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தைக் குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தினோம். இதில் அமெரிக்காவின் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் பல போர் விமானங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.

சிரியாவின் ‘அல்-டன்ஃப்’ நகரில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீதும் எங்களது படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.

ஜோர்டான் மக்களும், முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்படும் அமெரிக்கர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த வேண்டும்.

ஹார்முஸ் நீரிணைப் பகுதி தற்போது ஈரானின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. அமெரிக்கா தனது தாக்குதலை நிறுத்தாத வரை, இந்த வழியாக எந்தவொரு எரிபொருள் கப்பலும் கடந்து செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.

இவ்வாறு ஈரான் ராணுவம் எச்சரித் துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இந்த நேரடி மோதலால் வளைகுடா பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *