திண்டுக்கல், மே 21- திண்டுக்கல் அ.நாகராஜன் நா. லட்சுமி காந்தம் ஆகியோரின் மகனும், மேனாள் மாநில இளைஞரணி துணைச் செயலாளருமான நா.கமல்குமாருக்கும், திருமங்கலம் ஜெ.நாக லெட்சுமி ஆகியோரின் மகள் நா.கிருஷ்ண தர்ஷினிக்கும் வாழ்க்கை இணையேற்பு விழா திண்டுக்கல் காமராஜர் திருமண அரங்கில் 18.05.2026 காலை 10.30 மணியளவில் சிறப்பு டன் நடைபெற்றது.
இணையேற்பு விழாவிற்கு திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மதுரை வே.செல்வம் தலைமை வகித்தார். இரா.சுரேசு மணவிழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
திண்டுக்கல் மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டியன் மணமக்களுக்கு உறுதிமொழி கூறி, இணையேற்பு விழாவை நடத்தி வைத்தார். கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா. பெரியார் செல்வன், மணவிழாவில் பார்ப் பனர்களால் சொல்லப்படும் மந்திரங்களை கூறி, அதற்கான தமிழ் அர்த்தங்களையும் எடுத்துக்கூறினார்.
தமிழர்களை இழிமக்களாக்கி பார்ப் பனர்களை உயர் ஜாதியினராக வைத்துக் கொள்வதற்காகவே சமஸ்கிருத மந்திரங்களை வைத்துள்ளனர். இந்த நிலை மாற வேண்டும், அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சுயமரியாதைத் திருமண முறையைக் கொண்டு வந்தார். அதனை அறிஞர் அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் சுயமரியாதைத் திருமணம் சட்டமாக்கப் பட்டது. மணமக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து கழக ஒருங் கிணைப்பாளர் தஞ்சை.இரா. ஜெயக்குமார், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் மதுரை வா.நேரு, மணமகனின் சகோதரர் வினோத், திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க.கிழக்கு மாவட்ட செயலாளருமான அய்.பி.செந்தில் குமார் ஆகியோர் மணமக்களுக்கு வாழ்த்துகளைக் கூறி வாழ்த்துரை ஆற்றினார்கள்.
மதுரை மாவட்டக் கழகத் தலைவர் அ.முருகானந்தம், மதுரை மாவட்ட கழகச் செயலாளர் இரா.லீ.சுரேஷ், மதுரை முருகேசன், திண்டுக்கல் மாவட்ட துணைத் தலைவர் த.கருணாநிதி, திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவைச் செயலாளர் மு.நாகராசன், மாநகர தலைவர் அ.மாணிக்கம், மாநகரச் செயலாளர் தி.க.செல்வம் மற்றும் தோழர்களும், நண்பர்களும், உறவினர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த் தினார்கள். இறுதியாக மணமகனின் சகோதரர் மனோஜ் குமார் திருமண விழாவில் பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
