பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) 38ஆவது ஆண்டு விழா

3 Min Read

 வல்லம், மே  2 தஞ்சை வல்லத்திலுள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 38 ஆவது ஆண்டு விழா 30.04.2026  அன்று  பல்கலைக்கழகத்தின் உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேரா. வெ.இராமச்சந்திரன்  வரவேற்புரையாற்றினார்.

தொடர்ந்து கல்விப்புல முதன்மையர் பேராசிரியர்  உமையாள் சுந்தரி மற்றும் பேரா. ருபி   2025 – 2026 கல்வி ஆண்டிற்கான ஆண்டறிக்கையினை வாசித்தார். அதில் ஓராண்டில் நடைபெற்ற பல்கலைக்கழக முக்கிய நிகழ்வுகளையும் சிறப்புமிக்க சாதனைகளையும் பல்கலைக் கழகம் பெற்ற பாராட்டுகளையும் பட்டியலிட்டார். அந்த ஆண் டறிக்கையில் குறிப்பிடத்தக்க செய்திகளையும் கூறினார்.

பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் முனைவர் வீ.அன்புராஜ்  வாழ்த்துரையாற்றும்போது, ‘‘இப்பல்கலைக் கழகம் தந்தை பெரியார் மற்றும் அன்னை மணியம்மையார் அவர்களின் அருக்கொடையால் உருவாக்கப்பட்டு இன்று சிறப்பு பெற்று பல்கலைக்கழகமாக உயர்வு பெற்று இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும்  ‘ஆண்டு விழா’ நடத்தப் பெற்று வருகின்றது. இந்த ஆண்டு ஒரு நின்று சிந்திக்கும் தருணமாக இந்தாண்டிற்கான வெற்றிகளையும், ஆண்டு சாதனைகளையும் எடுத்துரைக்கப்பட்டது. இப்பல்கலைக் கழகம் உலகளாவிய அளவில் சிறப்புப் பெற்று இருக்கின்றது.

இப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களின் குழந்தைகளுக்கும், விவசாயக் குடும்பத்தில் உள்ள மாணவர் களுக்கும் ஒற்றை பெற்றோர் உள்ள மாணவர்களுக்கும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கும் மற்றும் பல கல்வி உதவி தொகை நிர்வாகத்தால் வழங்கப்பட்டது. இதில் பயன்பெற்றவர்கள் 2,694 மாணவர்களுக்கு ரூ.3.52 (ரூபாய் மூன்று கோடியே அய்ம்பத்து இரண்டு லட்சம்) கல்வி உதவித் தொகை நிர்வாகத்தால் வழங்கப்பட்டது. மேலும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம், இயந்திரக் கற்றல் ஆய்வகம், டேட்டா சைன்ஸ் ஆய்வகம், ரோபேடிக்ஸ் ஆய்வகம், தானியங்கி வாகன ஊர்தி ஆய்வகம் என பல ஆய்வகங்கள் மாணவர்களுக்காக மேம்படுத்துப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேரா. பி.கே.ஸ்சிறீவித்யா   சிறப்புவிருந்தினரை அறிமுகப்படுத்தினார்.

முதன்மை விருந்தினர் பொறியாளர் த.ஜெயந்தி (கூடுதல் பொதுமேலாளர், மனிதவள மேம்பாட்டு மய்யம் பாரத மிகு மின் நிறுவனம், திருச்சிராப்பள்ளி)  ஆற்றிய சிறப்புரையில், ‘‘சிறப்பு வாய்ந்த இப்பல்கலைக்கழக ஆண்டு விழாவில் நான் படித்த பல்கலைக்கழகத்திலே என்னை சிறப்பு விருந்தினராக அழைத்தமைக்கு மகிழ்ச்சியடைகிறேன். பதிவாளர் அவர்களிடமிருந்து 38 ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும்படி அழைப்பு வந்தது. அதைக்கண்டவுடன் நான் மற்றற்ற மகிழ்ச்சியடைந்தேன். நான் பயின்ற கல்லூரியில் என்னை சிறப்பு விருந்தினராக அழைத்தமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சமூக சீர்த்திருத்தவாதி  – புதுமையான ஆசிரியர் நமது பல்கலைக்கழக வேந்தர் அவர்கள். நாங்கள் கவுன்சிலிங்கு செல்லும்போது, பெண்களுக்கான உலகத்தில் முதல் பொறியியற் கல்லூரி’ என்று பெண்களை பெருமைப்பத்தக்கூடிய கல்லூரியாக இருந்ததால் இதைத் தேர்வு செய்தோம். மேலும் நாங்கள் படிக்கும் காலத்தில் மின்ணணுத் தொடர்பு துறையில் படிப்பதற்கு அதிகம் பேர் போட்டி போடுவார்கள். அப்போது, வேந்தர் அவர்கள் எங்களிடம் ஒரு கேள்வி கேட்டார். இந்தத் துறையை விரும்பி ஏற்றுக்கொள்கீறீர்களா?  பிடித்துள்ளதா? என்று கேட்டதன் மூலம்,  எங்களை எப்படி சிந்திக்க வைத்தார்கள் என்பதற்கு இது ஒன்றே உதாரணம். இப்பல்கலைக்கழகம் ஒங்கி வளர்ந்து வருவதற்கு எங்களால் ஆன உதவிகளை செய்வோம்’’ என்றார்.

வேந்தர் கி. வீரமணி அவர்கள் தலைமை  உரையில் குறிப்பிட்டதாவது :

பல்கலைக்கழக  வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றும் போது,  ‘‘எப்போதும் ஆண்டு விழாவிற்கு நமது பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர் களை சிறப்பு விருந்தினராக அழைத்து அவர்களை கவுரவப்படுத்தபடுவோம். இப்பல்கலைக்ழகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் படித்து முடித்த இம்மாணவரை இன்று சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதில் மற்றற்ற மகிழ்ச்சியடைக்கின்றோம். நாங்கள் எங்கள் செல்வத்தை எப்படியெல்லாம் பார்த்து மகிழ்கிறோம் என்பதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அப்படிப்பட்ட பொறியாளர் ஜெயந்தி ஆவார்கள். ஆகையால் இவர்களை பார்த்து கற்றுக் கொள்ளவேண்டும் என்றும், பின்னாளில் உங்களையும் உயர்ந்த பணியில் இருந்தால் சிறப்பு விருந்தினராக அழைப்போம்’’ என்று பல்கலைக் கழக மாணவர்களைப் பார்த்துக் கூறினார்.

கல்வியில் சிறந்த விளங்கிய மாணவர்களுக்கும், பணியில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. பல்கலைக்கழக டெக்மேக் இதழ் வேந்தர் அவர்களால் வெளியிடப்பட்டு, அதனை சிறப்பு விருந்தினர் பெற்றுக்கொண்டார்.

இறுதியாக பல்கலைக்கழக இணை துணைவேந்தர் பேரா. ஆர்.மல்லிகா  உரையாற்றினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *