‘‘எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது’’ முதலமைச்சர் ஜோசப் விஜய்மீது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடி தாக்கு!

சென்னை, மே 20 “பலரைச் சில காலம் ஏமாற்றலாம்; சிலரைப் பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது” என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை, தி.மு.க. தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித் துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. தலைவர் விஜய், தனது அலுவலக இருக்கையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிடுவது போன்ற ஒரு ஒளிப்படம் சமீபத்தில் இணையத்தில் வெளியாகிப் பரவியது. அதேபோல், ஆங்கிலேயர் கால நடைமுறைப்படி அரசு அலுவலக இருக்கைகளில் போடப்படும் வெள்ளை துண்டை முதலமைச்சர் ஜோசப் விஜய் அகற்ற உத்தரவிட்டதாகவும் செய்திகள் பரவின. த.வெ.க.வினர் இதனைச் சமூக வலைத்தளங்களில் வெகுவாகக் கொண்டாடி வந்தனர்.

எதிர்க்கட்சிகளின் பதிலடியும், அம்பலமான உண்மையும்

இந்நிலையில், இந்த விவகாரங்களுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து ஆதாரங்களுடன் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

ஏஅய் (AI) ஒளிப்படம்: முதலமைச்சர் ஜோசப் விஜய் அலுவலகத்தில் அமர்ந்து சாப்பிடுவது போல் வெளியான படம் உண்மையானது அல்ல, அது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலிப் ஒளிப்படம் என்பது அம்பலமானது.

வெள்ளை துண்டு சர்ச்சை: தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் பலரும் ஏற்ெகனவே தங்கள் இருக் கைகளில் வெள்ளை துண்டு போடாமல் தான் அமர்ந்திருந்தார்கள் என்பதற்கான ஒளிப்படங்களை நெட்டிசன்கள் பகிர்ந்து, இதுவொன்றும் புதிய மாற்றம் அல்ல என்று தெளிவுபடுத்தினர்.

இதுதொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்ட உண்மைத்தன்மை (Fact-Check) காட்சிப் பதிவை தி.மு.க. ஊடகப் பிரிவு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில்,

“சகோதரரின் மாபியா ரீல்ஸ் தொழிற்சாலை முழுவதும் அம்பலமாகி விட்டது. துண்டு சாகசம் முதல் ஏஅய் மதிய உணவுப் ஒளிப்படம் வரை, த.வெ.க.வினரின் போலிச் செய்திப் பிரச்சாரங்கள் அனைத்துத் திசை களிலிருந்தும் தோலுரிக்கப்பட்டு வருகின்றன”

மு.க.ஸ்டாலின் காரசார மறுபதிவு

திமுக ஊடகப் பிரிவின் இந்த பதிவை எக்ஸ் (X) தளத்தில் மறுபதிவு (Retweet) செய்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ‘‘பலரைச் சில காலம் ஏமாற்றலாம். சிலரைப் பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது’’ என்று ஆபிரகாம் லிங்கனின் புகழ்பெற்ற வரிகளைக் குறிப்பிட்டு தவெக மற்றும் முதலமைச்சர் ஜோசப்  விஜய்யை நேரடியாகத் தாக்கியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *