சொந்தக் கட்சியை டில்லியிடம் அடமானம் வைத்ததுபோல் தமிழ்நாட்டையும் அடகு வைக்க அ.தி.மு.க. தயங்காது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து
சென்னை, மார்ச்.22- சுயநலத்துக்காக சொந்தக் கட்சியை அடமானம் வைத்ததுபோல் தமிழ்நாட்டை டில்லியிடம் அடகுவைக்க அ.தி.மு.க. தயங்காது என எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக தாக்கி உள்ளார். அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை டில்லியில் நடந்து வருகிறது.…
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்வு
சென்னை, மார்ச் 22- தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான (2026-2027) மாணவர் சேர்க்கை மார்ச் 2ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து மும்முரமாக நடைபெற்று வருகிறது. அரசுப் பள்ளிகளில் படிப் பதால் மாணவ- மாணவிகளுக்கு கிடைக்கும் பல்வேறு நலத்திட்ட…
வரலாற்றிலேயே முதல்முறை ரூபாய் மதிப்பு கடும் சரிவு
அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் ரூ. 94 ஆக சரிந்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், அதனால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விநியோக பாதிப்பு ஆகியவை இந்த சரிவுக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.…
அமெரிக்க போர் விமானங்களுக்கு இலங்கை அரசு அனுமதி மறுப்பு
கொழும்பு, மார்ச் 22- இலங்கையில் அமெரிக்காவின் 2 போர் விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது என்று அதிபர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் 20.3.2026 அன்று அவர் கூறியதாவது: டிஜிபோத்தி விமானப் படை தளத்தில் நிலைநிறுத்தப் பட்டிருந்த…
பறிபோன பல்லாயிரம் உயிர்கள்… உயர்ந்த விலைவாசி… சரிந்த பொருளாதாரம்! அமெரிக்கா – ஈரான் போர் தந்தது என்ன?
வாசிங்டன், மார்ச் 22- உலக நாடுகள் பன்னாட்டு அளவில் தங்களது வர்த்தகத்தை டாலரில் நடத்திக் கொண்டிருப்பதாலும், உலகின் பல நாடுகளின் வர்த்தகங்களின் ஏற்றுமதி, இறக்குமதியில் அமெரிக்காவின் பங்கு இருப்பதாலும் அமெரிக்கா எடுக்கும் எந்தவொரு முடிவும் அமெரிக்காவிற்கும் தனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லாத…
அமெரிக்காவில் ஓட்டுநர் உரிமம் வழங்க புதிய முறை இரண்டு லட்சம் இந்தியர்களின் வாழ்வாதாரத்திற்கு வேட்டு வைத்த டிரம்ப்
வாசிங்டன், மார்ச் 22- இனிமேல் வெளி நாட்டவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது மற்றும் ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்தால் புதுப்பிக்கமுடியாது என்ற புதிய சட்டமான டெலிலாவிற்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித் துள்ளார் இதன் மூலம் அமெரிக்காவில் வணிக ரீதியிலான டிரக் ஓட்டும் இந்தியர்கள்…
உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்! பெரிதாகும் போர்? அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ளே வரும் பிரிட்டன்
லண்டன், மார்ச் 22- மத்திய கிழக்கில் மோதல் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதற்கிடையே இந்த மோதலில் இப்போது பிரிட்டன் உள்ளே வந்துள்ளது. அமெரிக்காவைத் தனது தளங்களைப் பயன்படுத்தப் பிரிட்டன் அனுமதி கொடுத்துள்ளது. இது மத்திய கிழக்கு மோதலில் மிகப் பெரிய…
கத்தார் எரிவாயு ஆலை மீது ஈரான் தாக்குதல் உலக நாடுகளிடையே எரிவாயு விநியோகம் பாதிப்பு விலையும் கணிசமாக உயரும் அபாயம்!
தோகா, மார்ச் 22- மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, கத்தாரில் உள்ள முக்கிய எரிவாயு உற்பத்தி மய்யங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் உலகளாவிய எரிவாயு விநியோகச்…
100% ஓட்டுப்பதிவு செய்வோம்! ஓட்டுகளை விற்க மாட்டோம்?
காரைக்குடி அருகில் உள்ள கல்லல் ஒன்றியம் ஆலம்பட்டு கிராமத்தின் பெரியார் நகர் பொதுமக்கள் வைத்துள்ள பதாகை சிவகங்கை மாவட்டத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. பாரம்பரிய மிக்க பெரியார் நகர் என்பதே தனிச்சிறப்பு. திராவிடர் கழகப் பொறுப்பாளர் சங்குநாதன் முயற்சியில் இந்தப் பணி…
கழகக் களத்தில்…!
23.3.2026 திங்கள்கிழமை புதுமை இலக்கியத் தென்றல் - 1071 சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: பேராசிரியர் தனராசு (செயலாளர்) *தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) *சிறப்புரை: மழவை தமிழமுதன்…
