அமராவதி, ஜூன் 30– ஆந்திர தலைநகர் அமராவ தியின் தலைமைச் செயலகத்தில் இருந்து, மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு துறை மேலதிகாரிகளுடன் காணொலி மூலம் முதலமைச்சர் சந்திரபாபு நேற்று (29.6.2026)ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது:

“அரசு சேவைகளை மக்கள் மிகவும் சுலபமாக அறிந்து கொள்ளவும், அதன் மூலம் பயனடைய வும், தங்களுடைய பிரச்சினைகளையும், புகார் களையும் உடனுக்குடன் தெரிவிக்கவும் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக இணைய தளம் மூலம் மக்கள் அரசு சேவைகளை விரைவில் பெற்றுக்கொள்ளும் வகையில் வழி வகுக்க வேண்டும்.
இதேபோல் மக்களுடன் நேரடி தொடர்பு உள்ள அரசு துறைகளுக்கு ‘குரல் வழித் தகவல்’ அனுப்பினாலே அவர்களின் பிரச்சினை களை அறிந்து அதிகாரிகள் செயல்பட வேண்டும்.
இதற்காகவும் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே ‘மன மித்ரா’ எனும் ‘வாட்ஸ் ஆப் சேவை’ அமலில் உள்ளது. இதனை மக்கள் சரிவர பயன்படுத்தி வருகின்றனர்.
எழுத, படிக்கத் தெரி யாதவர்கள் கூட தங்களின் பிரச்சினைகளைத் தெரி விக்க இந்தத் திட்டம் அவசியம்.
இவ்வாறு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு பேசினார்.
