புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! – கபில்சிபல்
புதுடில்லி, ஆக.16 - ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞ ருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது: பாரதிய நியாய சம்ஹிதா மசோதா அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலச் சட்டங்களை நீக்குவதாகக் கூறும் பாஜக…
நம்பிக்கையில்லா தீர்மானம்! மணிப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்களை பேச விடாமல் தடுத்த பா.ஜ.க.!
புதுடில்லி, ஆக.16 - நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மணிப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்களை பேச விடாமல், ஒன்றிய பாஜக அரசு தடுத்ததாக காங்கிரஸ் மக்களவைக் குழு துணைத் தலை வர் கவுரவ் கோகோய் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். மணிப்பூரைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர்…
இந்திய குடியுரிமையைத் துறந்து வெளிநாடுகளில் குடியேறும் இந்தியர் – மோடி ஆட்சியில் அதிகரிப்பு!
புதுடில்லி, ஆக.16 இந்திய குடியுரிமை வேண்டாமெனக் கூறி விட்டு, வெளிநாடுகளில் குடி யேறும் இந்தியர்களின் எண் ணிக்கை, கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக ஆட்சியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, 2018 ஜனவரி முதல் 2023 ஜூன்…
வேளச்சேரி – பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் பாதை பணிகள்: நடப்பு நிதியாண்டில் முடிக்கத் திட்டம்
சென்னை,ஆக.16 - வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் பாதைப் பணிகளை நடப்பு நிதி யாண்டில் (2023-2024) முடிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.தெற்கு ரயில்வே சார்பில், நாட்டின் 77ஆவது சுதந்திர தின விழா பெரம்பூர் ரயில்வே மைதா…
தமிழ்நாட்டுக்கு காவிரியில் 10 டிஎம்சி தண்ணீர் திறக்க கருநாடகா ஒப்புதல்
பெங்களுரு, ஆக. 16 - பெங்களூரு நகரில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் சுதந்திர நாள் விழா நேற்று நடைபெற்றது. அப் போது முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதன் பிறகு செய்தியாளர் களிடம் டி.கே.சிவகுமார் கூறு கையில்,…
கூடங்குளம் 3, 4ஆவது அணுஉலை கட்டுமானப் பணி இறுதிக் கட்டத்தை எட்டியது வளாக இயக்குநர் எம்.எஸ்.சுரேஷ் தகவல்
திருநெல்வேலி,ஆக.16 - திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 3 மற்றும் 4ஆவது அணுஉலை கட்டுமானப் பணிகள் இறுதிக் கட் டத்தை எட்டியுள்ளதாக சுதந்திர நாள் விழாவில் வளாக இயக்குநர் எம்.எஸ்.சுரேஷ் தெரிவித்தார்.கூடங்குளம் அணுமின் நிலை யம் சார்பில் அணுவிஜய் நகரியத் தில் நடைபெற்ற…
தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்
திருநெல்வேலி,ஆக.16-தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப் பட்ட மாணவர், அவரது தங் கையை திருநெல்வேலி அரசு மருத் துவ கல்லூரி…
ராமநாதபுரம் சாலை விபத்தில் பலியான இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, ஆக.16 - ராமநாதபுரம் சாலை விபத்தில் உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கு ஆறு தல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக முதல மைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,…
வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிட்டால் பிரியங்கா வெற்றி பெறுவார் – சிவசேனா எம்.பி.
மும்பை, ஆக. 16 - 2024 மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்டால் பிரியங்கா காந்தி நிச்சயம் வெற்றி பெறுவார் என்று சிவசேனா (யு.பி.டி.) நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின்…
தொழில் வளர்ச்சிக்கான தொழில்நுட்ப மாநாடு!
சென்னை, ஆக.16 - சென்னையில் பிளாஸ்டிக் தொழில் வளர்ச்சிக் கான 5ஆவது தொழில்நுட்ப மாநாடு 18.8.2023 அன்று ஒன்றிய அரசு அமைப்புகளின் ஆதரவோடு இறக்குமதிக்கு மாற்றாக உள் நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கம் நோக்கில் நடைபெறுகிறது!சென்னை தேனாம்பேட்டை அய்யாத் ரீஜென்சி அரங்கில் நடைபெறும்…
சென்னை உயர்நீதிமன்றம் சிறப்புத் தீர்ப்பு
மருத்துவ மேற்படிப்புகளுக்கு செல்லும் அரசு மருத்துவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கும் தமிழ்நாடு அரசின் கொள்கையில் தலையிட முடியாது!சென்னை,ஆக.16 - மருத்துவ மேற் படிப்புகளில் அரசு மருத்துவர் களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு மற்றும் ஊக்க மதிப்பெண் வழங் கும் தமிழ்நாடு அரசின் கொள்கை…
நாட்டிலேயே முதல்முறையாக கோவா அரசு மருத்துவமனையில் கட்டணமில்லா செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை
பனாஜி, ஆக. 16 - நாட்டிலேயே முதல் முறையாக கோவா அரசு மருத்துவமனையில் இலவச செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.இயற்கையாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத இணையர்களுக்கு மிகவும் பொது வான செயற்கைக் கருத்தரிப்பு முறையாக ‘இன் விட்ரோ கருத் தரிப்பு (அய்விஎப்)’ சிகிச்சை விளங்குகிறது.இந்நிலையில் கோவா அரசு மருத்துவக்…
