மின் கட்டண உயர்வு விவகாரம் அமைச்சர் நிர்மல் குமாருக்கு தி.மு.க. மேனாள் அமைச்சர் சா.சி.சிவசங்கர் கடும் கண்டனம்

சென்னை, ஆகஸ்ட் 1 மின்கட்டண உயர்வு தொடர்பான விவகாரத்தில் திமுக தலைவர் குறித்து விமர்சித்த அமைச்சர் நிர்மல் குமாருக்கு திமுக மேனாள் அமைச்சர் சா.சி. சிவசங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மேனாள் அமைச்சர் சா.சி. சிவசங்கர் அளித்த பேட்டி:

“மின்கட்டண உயர்வு தொடர்பான புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எங்கள் தலைவர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், ‘வாட்ஸ்அப்பில் வந்த செய்தியை வைத்து தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்’ என்று கூறுகிறார். திமுக தலைவரின் அரசியல் அனுபவம், வயது மற்றும் அவர் வகித்த பதவிகள் ஆகியவற்றைச் சரியாகப் புரிந்து கொண்ட பிறகே அவர் பற்றி கருத்து தெரிவிக்க வேண்டும்.

அமைச்சர் நிர்மல் குமார் இனிமேல் இத்தகைய நையாண்டிப் பேச்சைத் தவிர்த்துவிட்டு, எழுப்பப்படும் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கப் பழக வேண்டும். மக்கள் மனதில் நிலையான இடத்தைப் பெற வேண்டுமென்றால், வெறும் பெயர் மாற்றங்களால் மட்டுமே முடியாது; மக்கள் நலனுக்காகச் செய்யப்படும் திட்டங்களாலும் செயல்பாடுகளாலும் மட்டுமே அது சாத்தியமாகும்.” தொடர்ந்து பேசிய அவர், “முதலமைச்சர் ஜோசப் விஜய் இங்கே வர வேண்டாம் என கருநாடக முதலமைச்சர் கூறுகிறார் என்றால், தமிழ்நாட்டில் இருந்து யாராவது ஒருவர் ‘விஜய் அங்கு வரப் போகிறார்’ என்ற தகவலைத் தெரிவித்திருக்க வேண்டும். அதனால் தான் தற்போது வர வேண்டாம் என அம்மாநில முதலமைச்சர் கூறுகிறார். இந்த விவகாரத்தில் உண்மை நிலையை வெளிப்படையாகப் பேசாமல், இப்படி மறைத்து மறைத்து பேச வேண்டிய அவசியம் என்ன? இப்போதும் இந்த அரசு கள்ள மவுனம் காத்து வருகிறது.

எல்லாப் பிரச்சினைகளுக்கும் அமைதியாக இருப்பதன் மூலம் மக்கள் மத்தியில் எவ்வித கொந்தளிப்பும் ஏற்படாது என அரசு நினைக்கிறது. ஆனால், அரசின் இந்த மவுனமே ஒருகட்டத்தில் மக்களுக்கு எதிராக மாறி, பெரும் புரட்சியாக வெடிக்கும்” என்று எச்சரித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *