இறப்புக்கு காரணமான விஷ சாராயக் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: ரூ.10 லட்சம் அபராதம்! தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்ட திருத்த சட்ட முன் முடிவு நிறைவேற்றம்
சென்னை, ஜூன் 30 தமிழ்நாட்டில் கள்ளச் சாராய உயிரிழப்பு ஏற்பட்டால், கள்ளச் சாராயம் தயாரித்து விற்பவருக்கு ஆயுள்காலம் வரை கடுங்காவல் சிறை தண்டனையுடன் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா நேற்று (29.6.2024) தமிழ்நாடு சட்டப்பேரவையில்…
வெப்ப அதிகரிப்பால் பல நாடுகளிலும் மக்கள் பெரும் பாதிப்பு இந்தியாவில் 68 கோடி பேர் பாதிப்பு
புதுடில்லி, ஜூன் 30 அமெரிக்காவின் பருவநிலை மத்திய ஆய்வுக் கூடத்தின் விஞ்ஞானிகள் குழு நேற்று (29.6.2024) வெளியிட்ட அறிக்கை. இந்த ஜூன் மாதம் சுட்டெரித்த வெயிலின் காரணமாக இந்தியாவில் 61.9 கோடி, சீனாவில் 57.9 கோடி, இந்தோனேசியாவில் 23.1 கோடி, நைஜீரியாவில்…
பிஜேபி ஆளும் அரியானா அரசு பள்ளிகளில் 4 லட்சம் போலி மாணவர்கள் : சிபிஅய் விசாரணை தொடக்கம்
சண்டிகர், ஜூன் 30 கடந்த 2016-இல் அரியானா அரசுப்பள்ளிகளில் 4 லட்சம் போலி மாணவர் சேர்க்கை மூலம் நிதி மோசடி செய்த விவகாரம் குறித்து சிபிஅய் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்த வழக்கை சிபிஅய் வசம் ஒப்படைக்க பஞ்சாப்,…
பெரியார் மெடிக்கல் மிஷன் சார்பில் நலவாழ்வுக்கான மருத்துவ அறிவுரைகள் மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்
பெரியார் மெடிக்கல் மிஷன் சார்பில் நலவாழ்வுக்கான மருத்துவ அறிவுரைகள் மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் ‘உடல் நலமும், மன நலமும்’ உரை தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டம் சென்னை, ஜூன் 30- பெரியார் மெடிக்கல் மிஷன் சார்பில் நலவாழ்வுக்கான மருத்துவ…
ஆசிரியர் திறன் மேம்பாடு குறித்த ஆய்வறிக்கை வெளியீடு
புதுடில்லி, ஜூன் 30- விகிதம் மற்றும் விகிதாச்சாரம், தர்க்கரீதியான பகுப்பாய்வு, இயற்கணிதம் உள்ளிட்ட பாடங்களில் கேட்கப்பட்ட அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்க இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 80 சதவீத கணித ஆசிரியர்கள் தடுமாறுவதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய அணுகுமுறை
சென்னை, ஜூன் 30- தமிழ்நாட்டில் நடக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் முறைகேடுகள் இல்லாதவையாக இருப்பதை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) புதிய முறையை கையாள உள்ளது. அதன்படி கூடுதல் மின்னணு கண்காணிப்பு வழி முறைகளை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.…
மக்களுக்கு எளிய வசதி – வருவாய்த்துறை நில விவரங்கள் டிஜிட்டல் மயம் அனைத்து ஆவணங்களுக்கும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஜூன்30- தமிழ்நாடு முழுவதும் வரு வாய்த் துறை அனைத்து நில ஆவணங்களையும் டிஜிட்டல் மயமாக்கியுள்ள நிலையில், பட்டா மாற்றம், நில எல்லை அளவை, புல வரைபடம் என அனைத்தையும் ஆன் லைனில் விண்ணப்பித்து, வீட்டிலிருந்தே பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிலம்…
பிஜேபி – ஆர்எஸ்எஸ்-சுக்குள் முட்டல் மோதல்: உறுப்பினர்களை அவமதிக்கும் ஓம் பிர்லா
புதுடில்லி, ஜூன்30- குஜராத் மாநிலத்தில் முழுமையான அரசு அமைப்புகளுமே ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவ சக்திகளால் அபகரிக்கப்பட்டுள்ளன. 1992 ஆம் ஆண்டிலிருந்து துவங்கி இன்று எந்த துறையிலும் ஹிந்துத்துவா ஆதிக்கம்தான். அவர்களை மீறி அங்கு எதுவுமே செய்யமுடியாது. எடுத்துக்காட்டாக குஜராத் தின் அகமதாபாத்தில் உள்ள…
நேரில் செல்ல முடியாத குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு…
சென்னை, ஜூன் 30- நியாய விலைக் கடைகளுக்கு நேரில் செல்ல முடியாத முதி யோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் அங்கீகரிக்கப் பட்ட பிரதிநிதிகள் மூலம், இன்றி யமையாப் பொருட்களை பெறும் திட்டத்தை அரசு செயல்படுத்தி உள்ளது. இதன் மூலம், 3,15,437 குடும்ப அட்டைதாரர்களுக்கு…
வீரவணக்க முழக்கத்தோடு உடுக்கடி அட்டலிங்கம் உடல் அடக்கம்
இலால்குடி. ஜூன் 30- இலால்குடி மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் உடுக்கடி அட்டலிங்கம் (வயது 93) 17-6-2024 அன்று இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 22-6-2024 அன்று மாலை மறைவுற்றார். அவரது…
பெரியார் நூலக வாசகர் வட்டம்
4.7.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் சென்னை: மாலை 6.30 மணி l இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம் சிறப்புரை: டாக்டர் ராதிகா முருகேசன்…
வருந்துகிறோம்
எல்லாபுரம் ஒன்றிய கழகத் தலைவர் அருணகிரியின் தந்தையார் இன்று (30.6.2024) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது உடலுக்கு எல்லாபுரம் கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். இறுதி ஊர்வலம் நாளை (1.7.2024) மாலை…
