இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பும் – தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து நடத்தும் 13 ஆம் பகுத்தறிவாளர் கூட்டமைப்பு தேசிய மாநாடு
முதல் நாள்: 28.12.2024 இடம்: திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி நிலையவளாகம், கலைஞர் கருணாநிதி நகர், திருச்சிராப்பள்ளி வரவேற்புரை: ஆர். தமிழ்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) சிறப்பு விருந்தினர்கள்: சுதேஷ் கோதேராவ் (பொதுச்செயலாளர், FIRA), நரேந்திர நாயக் (தலைவர், FIRA) தந்தைபெரியார்…
இரா. நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26.12.2024) சென்னை, தியாகராயர் நகர், பாலன் இல்லத்தில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் இரா. நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில், அவருக்கு பொன்னாடை…
இயற்கையில் கிடைக்கும் மின்னொளி
இரவு நேரச் சாலைகளில் பயணம் செய்யும்போது சாலை ஓரங்கள், நடுக்கோடுகள் ஆகியவை நம் வாகனத்தின் ஒளி பட்டவுடன் ஒளிர்வதைப் பார்த்திருப்பீர்கள். எல்லா இடங்களிலும் மின் விளக்கு பொருத்த மின்சாரம் அதிகளவு தேவைப்படும். அதைக் குறைக்கவே இவ்வாறான ஒளிரும் பெயின்ட்கள் பயன்படுகின்றன. ஆனால்…
சரியான நேரம் + சரியான உணவு = சிறந்த உடல் நலம்
மின்சார விளக்குகள் வராத காலத்தில், இரவு உணவை மாலையிலேயே உண்டுவிட்டு உறங்கச் செல்லும் வழக்கம் இருந்தது. இன்றும் கூட சிலர், சூரியன் மறைந்த பின்னர் சாப்பிட மாட்டார்கள்; அதை ஒரு பழக்கமாகவே பின்பற்றி வருகின்றனர். இது, உடலுக்கு நல்லது என்கிறது சமீபத்திய…
நெகிழியை உண்ணும் நிலப் புழுக்கள்
மைக்ரோ பிளாஸ்டிக் எனும் நுண்நெகிழிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் ஆபத்துகள் பற்றி நாள்தோறும் ஆய்வுகள் வெளிவந்தபடி உள்ளன. இவற்றை நிரந்தரமாக அழிக்க விஞ்ஞானிகள் புது வழிகளைக் கண்டறிந்து வருகின்றனர். கனடாவைச் சேர்ந்த பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உணவுப் புழுக்களை…
27.12.2024 வெள்ளிக் கிழமை தந்தை பெரியார் 51ஆவது நினைவு நாள் வைக்கம் வெற்றி முழக்கம்
பழனி: மாலை 6.00 மணி * இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், ஆர்.எப்.ரோடு, பழனி * தலைமை: மா.முருகன் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: பொன்.அருண்குமார் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: இரா.வீரபாண்டியன் (தலைமைக் கழக அமைப்பாளர்), வீர.கலாநிதி (பொதுக்குழு…
அய்யா! நின் நினைவிடத்தில் சூளுரைப்போம்!
கவிச்சுடர் கவிதைப்பித்தன் ஈரோட்டு நாயகனே! தமிழர் தங்கள் இனமானச் சூரியனே! எட்டுத் திக்கும் மார்தட்டிச் சுழன்றுவந்தாய்! மனித னுக்கு மானமும் அறிவும்தான் அழகே என்றாய்! கூர்மிக்கச் சிந்தனையால் குரல்கொ டுத்தாய்! கொட்டாவித் துயில்கலைத்தாய்! எழுச்சி தந்தாய்! போராடி உரிமைகளைப் பெற்றுத் தந்தாய்!…
படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
மருத்துவமனையில் இருந்தபோதுகூட, நாணயத்தை, உறுதியைக் கடைப்பிடித்தவர்! ஈ.வெ.கி.ச.இளங்கோவன், வரலாற்றில் இடம்பிடித்தவர் அல்ல; வரலாற்றை உருவாக்கியவர், தன்மானத்தின்மூலமாக! கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காத பிடிவாதக்காரர்! தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், ஈரோட்டில் உள்ள ஈ.வெ.கி.ச.இளங்கோவன் இல்லத்திற்குச் சென்று, அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை…
தந்தை பெரியார் நினைவு நாள் : பெரியார் பகுத்தறிவு எணினி நூலகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தலைமையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தந்தை பெரியாரின் 51-ஆவது நினைவு…
