விளம்பரத்துக்காக என்னை பயன்படுத்துவதா? மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கூறும் தகவல்
பானிபட், அக். 4- ‘என்னுடைய உணர்வுகளை வைத்து விளம்பரம் செய்ய முயற்சித்தார்கள். ஆகையால் மறுத்துவிட்டேன்' என்று பிரதமரிடமிருந்து வந்த அழைப்பை மறுத்தது குறித்து மேனாள் மல்யுத்த வீராங்கனையும், காங்கிரஸ் சார்பில் அரியானா சட்டமன்றத்தேர்தலில் போட்டியிடும் வினேஷ் போகத் கூறினார். நடைபெற்று முடிந்த…
புதிய தொழில் மேம்பாட்டுத் திட்டம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தேனி, அக். 4- தமிழ்நாடு அரசால் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்காக 'புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டப்படிப்பு, பட்டய படிப்பு, அய்.டி.அய்., தொழிற்கல்வி படித்தவர்கள்…
வைக்கம்
வைக்கம் சத்தியாக்கிரஹத்தைப் பற்றி காந்தியடிகள் பின்வருமாறு தமது பத்திரிகையில் எழுதுகிறார். திருவாங்கூர் அரசாங்கத்தார் குரூர் நம்பூதிரிபாட் அவர்களை விடுதலை செய்ததைக் குறித்தும், ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் மீதிருந்த தடை உத்தரவு எடுக்கப்பட்டதைக் குறித்தும் வாசகர்கள் சந்தோஷமுறுவார்களென நினைக்கின்றேன். எனக்கும் போலீஸ் கமிஷனருக்கும்…
நமது அரசியல் நிலை – நூல் வலை
மகாராஷ்டிரர்கள் ‘நூல்வலை’யில் வீழாமல் தப்ப உறுதி கொண்டதன் பொருட்டு அவர்களுக்கு வாழ்த்துக் கூறுவதாக மகாராஷ்டிர மாகாண மகாநாட்டில் தலைமை வகித்த ஸ்ரீமான் தேசமுகர் கூறினாராம். சட்டசபையென்னும் மாயவலையில் சிக்குண்டவர்களுக்கு மகாத்மா அருளிய ‘பக்திவலை’யின் பெருமை எவ்வாறு புலனாகும்? ஆகவே, இவ்வாறு இவர்…
ஸ்ரீலஸ்ரீ சுவாமிகளின் சொற்பொழிவு
மெய்யன்பர்களே! உலகில் நடைபெறும் நிகழ்ச்சி முறைகளைப் பலருக்குத் தெரிவிப்பதற்கும் நல் உணர்ச்சியை மக்களிடையெழுப்புவதற்கும் பத்திரிகைகள் இன்றியமையாதன. கிராமாந்திரங்களில் விஷயம் யாதொன்றும் தெரிந்துகொள்ள இயலாதவர்கள் பத்திரிகைகளினால் வியாபாரம், அரசாங்கமுறை, தற்காலநிலை முதலியவைகளைத் தெரிந்து கொள்வார்கள், பல பெரியார்களின் கருத்தை அறிந்து கொள்வார்கள். வியாபாரம்,…
5.10.2024 சனிக்கிழமை திராவிடர் கழக இளைஞரணி மாவட்ட கலந்துரையாடல்
தச்சநல்லூர்: மாலை 5 மணி * இடம்: கீர்த்தி மெட்டல் கூட்ட அரங்கம், சங்கரன்கோயில் சாலை, தச்சநல்லூர் * தலைமை: ஆ.வீரபாண்டிய கட்டபொம்மன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * வரவேற்புரை: மு.தமிழ்ச்செல்வன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) * முன்னிலை: ச.இராசேந்திரன் (மாவட்ட…
6ஆவது தருமபுரி புத்தகத் திருவிழா – 2024 (04.10.2024 முதல் 13.10.2024 வரை)
மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 6-ஆவது தருமபுரி புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 52 ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர் களும், கழகத் தோழர்களும், பொது…
விவசாயிகளின் எதிர்ப்புக்குள்ளாகும் பா.ஜ.க. வேட்பாளர்கள்!
புதுடில்லி, அக்.4 அரியானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக வேட்பா ளர் சுனிதா துக்கலுக்கு, விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து விரட்டியடித்த நிகழ்வு 2.10.2024 அன்று அரங்கேறியது. இதனைத்தொடர்ந்து வேட்பாளரின் பாதுகாவலர்கள், குறுக்குப் பாதை வழியாக அவரை அழைத்துச்சென்றனர். எனினும்…
சென்னை-உலக சினிமா திரையிடல் விழா
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் நாள்: 5.10.2024 (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை 6.10.2024 (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை பொருள்: உலகளவில் சமூகநீதி, சமூக நல்லிணக்கம்,…
நடப்பு ஆண்டு உதவித் தொகைக்கு தமிழ் அறிஞர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, அக்.4 தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வரும் நிலையில், புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கான தகுதிகளை தமிழ்நாடு அரசு அறி…
