பெரியார் நாடு (உரத்தநாடு) பகுதிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு (3.3.2025)
ஒக்கநாடு மேலையூரைச் சேர்ந்த முத்தம்மாள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். பொதுமக்கள் சார்பில் தமிழர் தலைவருக்கு சேவல் கோழி அன்பளிப்பு. மணவிழா அரங்கிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மணமக்கள் குடும்பத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு. …
திண்டுக்கல்லுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு சட்டமன்ற உறுப்பினர், கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு (27.2.2025)
திண்டுக்கல்லுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு சட்டமன்ற உறுப்பினர் அய்.பி. செந்தில்குமார், மாவட்டத் தலைவர் வீரபாண்டி, பெரியார் பெருந்தொண்டர் மயிலை நா. கிருஷ்ணன் குடும்பத்தினர் பயனாடை அணிவித்து அன்புடன் வரவேற்றனர். சட்டமன்ற உறுப்பினர் அய்.பி. செந்தில்குமாருக்கும், வழக்குரைஞர் கொ. சுப்பிரமணியம்…
‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை
தி.மு.க. நகர செயலாளர் ஆ.வேலுமணி ரூ.10,000 முதல் தவணையை ‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடையாக தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளனர் (பழனி, 27.2.2025)
தா.பழூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுச்சியுரை
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நூற்றாண்டை கடந்தது! சமஸ்கிருதக் கலாச்சாரத்தை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது!! தா.பழூர்,மார்ச்.5 தந்தை பெரியார் 1926 ஆம் ஆண்டிலேயே ‘குடிஅரசு’ பத்திரிகையில் “தமிழுக்குத் துரோகமும் – ஹிந்தியின் ரகசியமும்” என்று கட்டுரை எழுதி புத்தகமாக வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஹிந்தி…
கிரையப் பத்திரம் பெறாத 12,495 மனைகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு ஏற்பாடு
சென்னை, மார்ச் 5- கிரையப்பத்திரம் பெறாத 12,495 மனைகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் குழு அமைத்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் வழங்கப் பட்ட மனைகளுக்கு இதுவரை கிரையப் பத்திரம் பெறாமல் உள்ள 12,495…
அய்.அய்.டி முனைவர் படிப்பில் 560 ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. இடங்கள் பறிப்பு! சு.வெங்கடேசன் எம்.பி.
சென்னை, மார்ச் 5- அய்.அய்.டி.க்களில் இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறை படுத்தப் படாததால் முனைவர் படிப்பில் 560 ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர் இடங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்க டேசன் தெரிவித்துள்ளார். இடஒதுக்கீடு முறையாக நடைமுறை படுத்தப்படாததை மறைக்க…
கழகக் களத்தில்…!
6.3.2025 வியாழக்கிழமை வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மார்ச் 8 மகளிர் தின கருத்தரங்கம் மாதனூர்: காலை 10 மணி * இடம்: புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாதனூர் * தலைமை: முனைவர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
5.3.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பாஜகவை வீழ்த்த திராவிட இயக்கத்தால் மட்டுமே முடியும், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தல். * மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் மன்னார் வளைகுடாவில் எரிவாயு கிணறுகளை அமைக்கக் கூடாது: நடவடிக்கையை கைவிடுமாறு…
பெரியார் விடுக்கும் வினா! (1583)
வெகு நாளைக்கு முன்னமே வேதாந்தத் தத்துவப்படி, கடவுள் நம்பிக்கை யாருக்கு என்றால், பாமர மக்களுக்குத்தான். அறிவாளிக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா? கடவுள், மதம், சாத்தியம் ஞானிக்கு உண்டா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
புதிய கிளை கழக அமைப்புகள் உருவாக்கப்படும் கிருட்டினகிரி, மார்ச்5- கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 2.3.2025 அன்று காலை 11.00 மணியளவில் கிருட்டினகிரி பெரியார் மய்யம் அன்னை மணியம்மையார் கூட்டரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி…
