பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலை பல்கலை.)
வல்லம், ஜூன், 26 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலை.) சூரிய மின்சக்தி நிலையம் திறப்பு விழா இன்று (26.6.2026) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ‘எம்.வி. போட்டோவோல்டாயிக் பவர்’ லிமிடெட் நிறுவனத்தின் உதவியுடன் பல்கலைக்கழக (நிகர் நிலை) வளாகத்தில் மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள புதுப்பிக்கதக்க 220 கிலோவாட் சூரிய மின்நிலையத்தினை (220 kw grid-tied roof top solar power plant) வேந்தர் டாக்டர் கி.வீரமணி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அவர் தமது உரையில், தோரயமாக 1000 முதல் 1100 யூனிட்கள் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பல்கலைக்கழக (நிகர்நிலை) வளாகத்தின் மொத்த மின் நுகர்வு நாள் ஒன்றுக்கு 3000 யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் 33 சதவிகிதம் மின்சார செலவினம் சேமிக்கப்படுகிறது. புதிதாக நிறுவப்பட்டுள்ள சூரிய மின்சக்தி 2000 யூனிட்கள் உற்பத்தி செய்யப்படுவதனால் மின்நுகர்வு மூலம் பயன்படுத்தப்பட்ட மின்சாரம் யூனிட் அளவு குறைகிறது என்பதனை எடுத்துக்கூறினார்.
புதிய மற்றும் புதுப்பிக்கதக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) வழங்கிய நிதியுதவியுடன் 2011 ஆம் ஆண்டு ஒரு சுயநுகர்வு மின் உற்பத்தி உயிரி மீத்தனமயமாக்கல் (Biomechanisation) நிலையம் நிறுவப்பட்டது. இந்த நிலையம் கால்நடை சாணம், மனிதக் கழிவு (Night Soil), காய்கறிக் கழிவுகள் மற்றும் உணவுக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையத்தின் அன்றாட உயிரிவாயு உற்பத்தித் திறன் 500 கன மீட்டர் ஆகும்.
உற்பத்தி செய்யப்படும் உயிரிவாயு மூலம் சுமார் 60 கிலோ (kWc) மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், இந்நிலையம் செரிமானம் செய்யப்பட்ட உயிரியல் கழிவுப் பொருளையும் (digested slurry) உருவாக்குகிறது. இது உயர்தர மண் வள மேம்பாட்டுப் பொருளாளகவும் இயற்கை உரமாகவும் பயன்படுகிறது.
இத்திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. ஆண்டுதோறும் சுமார் 292 டன் கார்பன் டை ஆக்சைடு (CO2) வெளியேற்றத்தைக் குறைப்பதன் மூலம் பசுமைக் குடில் வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்துகிறது.
மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் உயிரி எரிபொருள் வாயுவாக்கி ஆராய்ச்சி மாணவர்களுக்கும், காப்புரிமை பெறுவதற்கும், தொழில்நுட்பத்தை அறிந்துகொள்வதற்கும் இவ்வுயிரி எரிபொருள் உதவுகிறது.
மேலும் பெங்களூளுருவைச் சேர்ந்த மணி சூரிய ஒளி மின்சக்தி நிலையம் அமைவதற்கு உறுதுணையாக இருந்தார். இந்நிகழ்ச்சியில் ‘எம்வி போட்டோவோல்டாயிக் பவர் லிமிடெட்’ அலுவல் அதிகாரிகள் கிரிதர கோபாலன் மற்றும் உன்னித்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக (நிகர்நிலை) இணை துணைவேந்தர் ஆர்.மல்லிகா, பதிவாளர் பி.கே.சிறீவித்யா, துறைத்தலைவர்கள், இயக்குநர்கள். பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
