புரட்சிக் கவிஞரின் பிறந்த நாள் உலகத் தமிழ் நாளாக அறிவித்த முதலமைச்சருக்கும் வேண்டுகோள் வைத்த தமிழர் தலைவருக்கும் நன்றி!
வடக்குத்து, மே 10- திராவிடர் கழகம் சார்பில் வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பக கருத்தரங்க கூடத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 135ஆவது பிறந்த நாள் விழா, கிளைக் கழக தலைவர் தங்க பாஸ்கர் தலைமையில் கழகப் பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன்,…
நன்கொடை
வடசென்னை மாவட்ட கழக காப்பாளர் செம்பியம் கி.இராமலிங்கம் அவர்களின் அன்னையார் கி.சரோஜா மறை வுற்ற அய்ந்தாம் ஆண்டு நினைவு நாளினையொட்டி (9.5.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 500 நன்கொடை வழங்கப்பட்டது.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
10.5.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: < பாகிஸ்தானுக்கு எதிராக போராடும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி. < அதிமுக ஆட்சியில் வீழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக திராவிட மாடல் ஆட்சி மாற்றியுள்ளது என முதலமைச்சர்…
பெரியார் விடுக்கும் வினா! (1643)
பார்ப்பானுடைய சூத்திரங்கள், மதங்கள், கடவுள்கள் இவற்றின் அசிங்கம், ஆபாசங்களையெல்லாம் நாங்கள் எடுத்துக் காட்டினால், எங்களை இந்தப் பார்ப்பனர்கள் நாத்திகர்கள் என்கிறார்கள்; ஆமாம், நாங்கள் நாத்திகர்கள் தான் என்று கூறுகின்றோமேயன்றி இப்படிப் பார்ப்பனர் எங்களைக் கூறுவதை மறுத்து என்றாவது எதையாவது கூறியதுண்டா? -…
‘குடிஅரசு’ இலக்கும் பயணமும் (7)
எட்டு ஆண்டுகள் மிகச் சிறப்பாக வீறுநடை போட்டு வந்த ‘குடிஅரசு' மக்களின் குருட்டுத்தனம் தொடர்ந்து கோலோச்சி விடாது, விரட்டுவதற்கு தந்தை பெரியாருக்குக் கிடைத்த ஒரு மிகப்பெரிய போர் கருவியாக விளங்கியது. அது செய்த அறிவு புரட்சியால் அகிலமே அறைந்தது, புதுமையாளர்கள் பூரித்தனர்.…
திருத்தம்
நேற்றைய (9.5.2025) ‘விடுதலை’யில் வெளி வந்துள்ள ‘‘ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம், சில பாடங்கள்’’ பகுதி – 2, கட்டுரையின் கடைசி பத்தி, 3ஆம் பாராவில் ‘தன்னுடன் அமர்ந்திருந்த மூத்த வழக்குரைஞர் மறைந்த R.N. கோதண்டராமன்’ என்று திருத்தி வாசிக்குமாறு வேண்டுகிறோம். தவறுக்கு…
அணு ஆயுதங்களை கையாளும் குழுவுடன் பாகிஸ்தான் பிரதமர் ஆலோசனை
இசுலாமாபாத், மே 10 பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப், நாட்டின் அணு ஆயுதங்களை கையாளும் ராணுவ அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்ட அழைத்துள்ளார். இந்தக் கூட்டத்தில், பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டத்தின் பாதுகாப்பு, பயன்படுத்தும் போது ஏற்படுத்தும் தாக்கம் அதற்கான…
ஜாதி ஒழிப்புக்கான ‘காலனி’ மொழிப் புரட்சி !
சமீபத்தில் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில் மிக முக்கியமான ஒரு சமூகநீதி முடிவு எடுக்கப்பட்டது. 'காலனி' என்ற சொல் பட்டியல் இன மக்களை, அம்மக்களின் வாழ்விடங்களை இழிவாகக் குறிப்பிடும் ஒரு சொல்லாக இருப்பதால் அச்சொல்லை உபயோகத்தில் இருந்தும் மற்றும் அரசு ஆவணங்களில்…
புரட்சிக் கவிஞரின் பொன்னான அறிவுரை – அறவுரை – இளைஞர்களுக்கு! (2)
புரட்சிக் கவிஞர் புத்துலகச் சிற்பியான தந்தைபெரியாரின் இலக்கியப் பட்டறை! அய்யாவின் அறிவுப் புரட்சியை அப்படியே உள்வாங்கி சுயமரியாதை உலைக் களத்தில் பகுத்தறிவு, சுயமரியாதைப் போராயுதங்களை – அறிவாயுதங்களை புவனத்திற்கு அளித்த கொள்கைப் பேரொளியாவார். இதற்குமுன் வந்த எந்தக் கவிஞரும் – இத்தகைய…
சமஸ்கிருதத்துக்கு முட்டுக்கொடுக்கும் உள்துறை அமைச்சர்
டில்லியில் 1008 சமஸ்கிருத உரையாடல் அமர்வுகளின் (சமஸ்கிருத சம்பாஷண் ஷிவிர்) நிறைவு விழா 4.5.2025 அன்று நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சா் அமித்ஷா தலைமை விருந்தினராக பங்கேற்றுப் பேசியதாவது: ‘‘காலனித்துவ ஆட்சிக்கு முன்பே சமஸ் கிருதத்தின் வீழ்ச்சி தொடங்கியது. அதன் மறு…
