வாசிங்டன், நவ. 3– உலக நாடுகளின் ஒட்டுமொத்த பார்வையும் தற்போது அமெரிக்காவை நோக் கித் திரும்பியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் எஞ்சிய 2 ஆண்டு கால ஆட்சி யின் அதிகாரத்தையும், எதிர்கால அரசியல் பாதையையும் தீர்மானிக்கும் மிக முக்கிய இடைக் காலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (நவம்பர் 3) தொடங்குகிறது.
இன்றைய வாக்குப்பதிவு நேரமும் விவரங்களும்:
இந்திய நேரப்படி இன்று மாலை 4:30 மணிக்கு வாக்குப் பதிவு அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. பிரதிநிதிகள் சபை மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. செனட் சபை (மேலவை): மொத்தம் உள்ள 100 இடங்களில் காலியாகும் 35 இடங்களுக்கு தேர்தல் நடை பெறு கிறது. இதனுடன் சேர்த்து 36 மாநிலங்களின் ஆளுநர்களுக்கான தேர்தலும் இன்று (3.11.2026) நடை பெறுகிறது.
டிரம்பிற்கு காத்திருக்கும் சவால்:
வழக்கமாக அமெரிக்க வரலாற் றில், அதிபர் பதவியில் இருக்கும் ஆளும் கட்சி இடைக்காலத் தேர்தலில் பின்னடைவைச் சந்திப் பதே வாடிக்கையாக இருந்துள்ளது. தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சிக்குக் குறைந்தபட்ச பெரும்பான்மையே உள்ளது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி ஏதேனும் ஓர் அவையையோ அல்லது இரண்டு அவைகளையுமோ கைப்பற்றும் பட்சத்தில், அதிபர் டிரம்பின் புதிய சட்ட மசோதாக்களைக் முடுக்கவோ அல்லது அவரது கொள்கைக் முடிவுகளைக் கட்டுப்படுத்தவோ அதிகாரம் பெறும். இதனால் டிரம்ப் நிர்வாகத்தின் மீதான பெரும் மதிப்பீடாகவும் இத்தேர்தல் பார்க்கப்படுகிறது.
முடிவுகள் எப்போது?
வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு, நாளை (4,11,2026) அதிகாலை முதல் தேர்தல் முடிவுகள் மற்றும் ட்ரெண்டுகள் ஒவ்வொன்றாக வெளியாகத் தொடங்கும். வல்லரசு அமெரிக்காவின் நாடாளு மன்றத்தைக் கைப்பற்றப் போவது டிரம்பின் குடியரசுக் கட்சியா அல்லது எதிர்க்கட்சியான ஜன நாயகக் கட்சியா என்பது நாளை காலை தெரியவரும்.
