பா.ஜ. கவுன்சிலர் சிறையில் வைத்து பதவி ஏற்க அனுமதி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

1 Min Read

திருவனந்தபுரம், ஜூலை 15– கேரளம் மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சியில் பா.ஜதாவை சேர்ந்த 20 கவுன்சிலர்கள் பதவி ஏற்கும்போது. சில கடவுளர் பெயர்களை கூறி பதவிப் பிமாணம்  செய்தனர். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கேரள  உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் பிரமாணம் செய்த 20 கவுன்சிலர்களின் பதவி ஏற்பு செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் 20 கவுன்சிலர்களின் பதவி ஏற்பு செல்லாது என உத்தரவிட்டது. மீண்டும் பதவி ஏற்க வேண்டும் என கூறியிருந்தது. அதன்படி, 19 கவுன்சிலர்கள் மீண்டும் பதவியேற்று கொண்டனர். செய்தனர். இந்தநிலையில் ஒரு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 20-ஆவது வார்டு கவுன்சிலர் சுகதன், தான் பதவி ஏற்க இடைக்காலப் பிணை வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் விசாரித்த போது, சுகதனுக்குப் பிணை வழங்கக்கூடாது என்றும், விய்யூர் மத் திய சிறையில் பதவி ஏற்க வசதி செய்து தரப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பரிசீலித்த நீதிபதி குஞ்சுகிருஷ்ணன் தலைமையிலான இருவர் அமர்வு, சுகதன் சிறையில் வைத்து பதவி ஏற்றுக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *