இந்நாள் – அந்நாள்

4 Min Read
- Advertisement -

தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் நினைவுநாள் இன்று (02-11-1903)

தமிழை ‘செம்மொழி’ என்று முதன்முதலில் மெய்ப் பித்தவரும், தமி ழறிஞரும், நூலாசிரியரும், தனித் தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார். இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர். ‘தமிழ் மொழி வரலாறு’ போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக் கணமான நாடகவியலையும் இயற்றியவர் ஆவார்.

“வடமேற்கே பல்லாயிரங் காலத்திற்கு அப்புற முள்ளதும், அய்ரோப்பாக்கண்டத்திலொரு பகுதியு மாகிய ‘ஸ்காந்திநேவியம்’ என்ற இடத்தினின்றும் ‘ஆரியர்’ என்ற ஜாதியார் புறப்பட்டு நாலா பக்கங்களிலும் சென்று சேர்ந்தனர். அவ்வாரியருள் ஒரு பிரிவினர் மத்திய ஆசியாவின் மேற்குப் பாகத்திலுள்ள ‘துருக்கிஸ்தானம்’ என்ற இடத்திற்றிறங்கினர்.

இவ்விடந்தங்கிய ஆரியர்களே “கைபர்க் கணவாய்’ வழியாக இந்தியாவினுட் புகுந்தனர். அவர்கள் அவ் வாறு புகுந்தமை தமிழர்களது நன்மைக்கோ அன்றித் தீமைக்கோ? இதனையறிவுடையோர் எளிதிலுணர்ந்து கொள்வார்கள்” என்று தாம் எழுதிய  “தமிழ்மொழியின் வரலாறு” பக்கம் 22-23 என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அவருடைய 123ஆம் நினைவு நாளில் (2.11.2026) அவரை நினைவு கூர்வோம்.

 

மிழை ‘செம்மொழி’ என்று முதன்முதலில் மெய்ப் பித்தவரும், தமி ழறிஞரும், நூலாசிரியரும், தனித் தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார். இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர். ‘தமிழ் மொழி வரலாறு’ போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக் கணமான நாடகவியலையும் இயற்றியவர் ஆவார்.

“வடமேற்கே பல்லாயிரங் காலத்திற்கு அப்புற முள்ளதும், அய்ரோப்பாக்கண்டத்திலொரு பகுதியு மாகிய ‘ஸ்காந்திநேவியம்’ என்ற இடத்தினின்றும் ‘ஆரியர்’ என்ற ஜாதியார் புறப்பட்டு நாலா பக்கங்களிலும் சென்று சேர்ந்தனர். அவ்வாரியருள் ஒரு பிரிவினர் மத்திய ஆசியாவின் மேற்குப் பாகத்திலுள்ள ‘துருக்கிஸ்தானம்’ என்ற இடத்திற்றிறங்கினர்.

இவ்விடந்தங்கிய ஆரியர்களே “கைபர்க் கணவாய்’ வழியாக இந்தியாவினுட் புகுந்தனர். அவர்கள் அவ் வாறு புகுந்தமை தமிழர்களது நன்மைக்கோ அன்றித் தீமைக்கோ? இதனையறிவுடையோர் எளிதிலுணர்ந்து கொள்வார்கள்” என்று தாம் எழுதிய  “தமிழ்மொழியின் வரலாறு” பக்கம் 22-23 என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அவருடைய 123ஆம் நினைவு நாளில் (2.11.2026) அவரை நினைவு கூர்வோம்.

மேற்குலகின் தலைசிறந்த பகுத்தறிவுவாதி
ஜார்ஜ் பெர்னாட்ஷா நினைவு நாள் இன்று (02-11-1950)

இந்நாள் - அந்நாள்

 

பகுத்தறிவாளர் ஜார்ஜ் பெர்னாட்ஷா அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு மிகச் சிறந்த நாடக ஆசிரியர், இலக்கியம் மற்றும் இசை விமர்சகர், மற்றும் அரசியல் ஆர்வலர் ஆவார். இவர் தனது கூர்மையான நகைச்சுவை, சமூக விமர்சனம் தீவிரமான சமூக சீர்திருத்தக் கருத்துக்களுக்காக உலகெங்கிலும் அறியப்பட்டவர்.

1856 ஆம் ஆண்டு ஜூலை  26 ஆம் நாளில் அயர்லாந்து டப்ளினில், பிறந்தார். 20 வயதில் லண்டனுக் குக் குடிபெயர்ந்தார். ஆரம்பத்தில் பல நாவல்களை எழுதினாலும், அவை வெற்றி பெறவில்லை. பின்னர், இசை மற்றும் இலக்கிய விமர்சனத்தில் தனது எழுத்துப் பணியைத் தொடங்கினார். இவரது விமர்சனங்கள் மிக நேர்த்தியாகவும், கூர்மையாகவும் அமைந்திருந்தன. பகுத்தறிவுடன் கூடிய சிந்தனையைத் தூண்டுகின்ற அளவிற்கு தனது அனைத்துப் படைப்புகளிலும் கருத்துகளை விதைத்தவர். தலைசிறந்த பகுத்தறிவு சிந்தனையாளர் ஆவார்.

விமர்சகராக இருந்த அனுபவம் இவரை நாடகங்களை எழுதத் தூண்டியது. இவர் 60க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார்.  இவரது படைப்புகள் பெரும்பாலும் கேலி, கிண்டல், நகைச் சுவை நிரம்பியதாக இருக்கும்.

சமூகத்தில் நிலவும் வறுமை, பாசாங்குத்தனம், மூடநம்பிக்கைகள், போர் மற்றும் முதலாளித்துவம் போன்ற தீவிரமான சிக்கல்களை தனது நாடகங்களின் மூலம் விமர்சித்தார். மக்களைச் சிரிக்க வைத்த அதே நேரத்தில், ஆழமாகச் சிந்திக்கவும் வைத்தார்.

பெர்னாட்ஷா தீவிர பொதுவுடைமை இயக்க வாதி ஆவார். ஃபேபியன் சொசைட்டி என்ற அமைப்பை நிறுவி யவர்களில் இவரும் ஒருவர். சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று நம்பினார்

1925 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார். ஆனால், ஆரம்பத்தில் பரிசுத் தொகையை ஏற்க மறுத்து, பின்னர் அதை இலக்கியப் பணிகளுக்காகக் கொடுத்துவிட்டார்.

1938 ஆம் ஆண்டில் Pygmalion திரைப் படத்தின் திரைக்கதைக்காக ஆஸ்கார் விருதையும் பெற்றார். நோபல் மற்றும் ஆஸ்கார் ஆகிய இரண்டு முக்கிய விருதுகளையும் பெற்ற வெகு சில படைப்பாளிகளில் இவரும் ஒருவர் ஆவார்.

ஜார்ஜ் பெர்னாட் ஷா தனது 94 ஆவது வயது வரை சுறுசுறுப்புடனும் எழுத்துப் பணியுடனும் வாழ்ந்தார். இவரது படைப்புகள் இன்றும் உலக அளவில் வாசிக்கப்பட்டு, மேடையேற்றப்பட்டு, மக்களின் சமூகச் சிந்தனையைத் தூண்டி வருகின்றன.

இவர் 1950 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் நாளில் தமது 94 ஆவது வயதில் இங்கிலாந்து எர்ட்ஃ போர்ட்சயரில்  மறைவுற்றார். இந்நினைவு நாளில் அவருடைய புகழைப் போற்றி நினைவுக் கூர்வோம்!!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *