ராய்பூர், அக்.21 சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றும் அய்பிஎஸ் அதிகாரி அங்கிதா (ஷர்மா), அண்மையில் நடைபெற்ற விஜயதசமி விழாவின் போது ஏகே-47ரக துப்பாக்கியால் சுட்டது தொடர்பான காணொலி சமூக வலை தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய விழாக்களில் ஒரு காவல்துறை அதிகாரி பொறுப்பற்ற முறையில் துப்பாக்கிச் சூடு நடத்துவது, அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பைக் கொச்சைப்படுத்தும் செயலாகும் என்றும், இது பொது மக்களின் பாதுகாப்பு மீதான முழுமையான அக்கறையின்மையை வெளிப் படுத்துவதாகவும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் பல கட்ட உத்தரவுகள் மற்றும் விதிமுறைகளுக்குப் பிறகுதான் துப்பாக்கிகளைக் கையில் எடுப்பார்கள். ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் சமூக விரோதிகளோடு காவல்துறையினரும் சட்டவிரோதத் துப்பாக்கிகளை பொது இடத்தில் பயன்படுத்துவது வாடிக்கையாகி உள்ளது. அவரது இந்த நடவடிக்கை சட்டவிரோதம் என்றாலும் இது விஜயதசமி விழா என்ற பெயரில் கண்டுகொள்ளாமல் விடுகிறார்கள்.
