மேற்காசிய மோதல்: உச்ச நீதிமன்றத்தில் வாரத்தில் 2 நாள்கள் காணொலியில் மட்டுமே விசாரணை; ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே பணியாற்றுங்கள்’ என அதிரடி!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, மே 16- மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள தீவிர மோதல் காரணமாக, இந்தியாவில் எரி பொருள் தட்டுப்பாடு கடுமையாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனைச் சமாளிக்க எரிபொருளைச் சிக்கன மாகப் பயன்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந் தார்.

பிரதமரின் இந்த அறிவுறுத்தலைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தனது செயல்பாடுகளில் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றப் பதிவாளர் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நீதிமன்ற விசாரணைகளில்
புதிய மாற்றம்

உச்ச நீதிமன்றப் பதி வாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, வாரத்தில் இரண்டு நாள்கள் நீதிமன்றப் பணிகள் முழுமையாக காணொலிக் காட்சிக்கு மாறுகின்றன. அதன் விபரங்கள் வருமாறு:

திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை

உச்ச நீதிமன்றத்தின் அனைத்து வழக்கு விசா ரணைகள் மற்றும் இதர பணிகள் காணொலிக் காட்சி (Online) மூலமாக மட்டுமே நடைபெறும்.

செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமை: வழக்கம்போல நேரடி விசாரணை மற்றும் காணொலிக் காட்சி ஆகிய இரண்டும் இணைந்த ‘ஹைபிரிட்’ (Hybrid) முறையில் பணிகள் நடைபெறும்.

எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் நோக்கில் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் நீதிபதிகளுக்கும் சில முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன:

நீதிமன்றப் பணியாளர்களில் 50% பேர் தங்களின் தேவைக்கு ஏற்ப வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தனித்தனி வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, சாத்தியமான வரை ஒன்றாக ஒரே காரில் பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேற்காசிய நெருக்கடி நிலை சீராகும் வரை, மறு அறிவிப்பு வரும் வரை இந்த புதிய நடைமுறைகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் அமலில் இருக்கும் என அந்த சுற் றறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *