ஜப்பானை நெருங்கும் டால்பின் சூறாவளி விமானங்கள் ரத்து! முகாம்களில் மக்கள் தஞ்சம்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

ஜப்பானின் தென் பகுதியில் உள்ள தீவுகளை நோக்கி டால்பின் சூறாவளி நகர்ந்து வருவதால், ஒகினாவா தீவில் உள்ள நாஹா விமான நிலையம் மூடப்பட்டது. இதனால் அனைத்து உள் நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சூறாவளியின் வேகம் மணிக்கு 144 கி.மீ என ஜப்பான் வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, 70 வயதுடைய 3 பேர் பலத்த காற்றினால் காயமடைந்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகினாவாவில் 240 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாளை (9.8.2026) வரை பலத்த காற்று மற்றும் கனமழை பெய்யும் என்பதால், பொதுமக்கள் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புயல் நாளை மறுநாள் காலை சீனாவின் கிழக்கு கடற்கரையைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நைஜீரியா: பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 308 பேரை மீட்ட ராணுவம்

அபுஜா, ஆக. 8- மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் அய்.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு ஆயுதக்குழுக்களும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்த பயங்கரவாத அமைப்புகள், கிளர்ச்சி குழுக்கள் பாதுகாப்புப்படையினர், பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேபோல், பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை இந்த பயங்கரவாத கும்பல்கள் கடத்தி வருகின்றன.

இதனிடையே, இந்த ஆண்டு பிபரவரி மாத தொடக்கத் தில் நைஜீரியாவின் நைஜர், குவாரா மாகாணங்களில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோரை கடத்தி சென்றனர். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பொதுமக்களை பாதுகாப்புப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பொதுமக்களில் 308 பேரை ராணுவம் நேற்று அதிரடியாக மீட்டுள்ளது. கடத்தப்பட்ட பொதுமக்கள் நைஜர் மகாணம் கனிஜி லேக் தேசிய பூங்கா வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *