திஸ்பூர், ஆக. 10- அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலம் முழுவதும் வெள்ளப்பெருக்கு கடுமையாகப் பாதித்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சிவசாகர் மாவட்டம்: வெள்ளத்தின் கோரத்தாண்டவத்தால் இம்மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
கச்சார் மாவட்டம்: வெள்ளத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப் படுத்தும் பணிகளிலும், நிவாரணப் பொருட்களை வழங்கும் பணிகளிலும் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு!
Leave a Comment
