சொந்த வீட்டு எலுமிச்சை மரங்களுக்கு ரூ.4.21 லட்சம் மானியமாம் பா.ஜ.க. எம்.பி. லும்பாராம் சவுத்ரி மீது கடும் விமர்சனம்!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

ஜெய்ப்பூர், ஆகஸ்ட் 1 ராஜஸ்தானில் தனது வீட்டில் உள்ள ஒருசில எலுமிச்சை மரங்களைக் காட்டி, ஒன்றிய அரசின் தோட்டக்கலைத் திட்டத்தின் கீழ் ரூ.4.21 லட்சம் மானியம் பெற்றுள்ள பாஜக நாடாளுமன்ற உறுப்பினரின் செயல் பெரும் சர்ச்சையையும் விமர்சனத்தையும் கிளப்பியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப் பினராக இருப்பவர் லும்பாராம் சவுத்ரி. இவர் சிரோஹி மாவட்டம் வடேலி கிராமத்தில் உள்ள தனது சொந்த வீட்டு நிலத்தில் உள்ள எலுமிச்சை மரங்கள் மற்றும் மேலும் சில மரங்களைச் சாகுபடி செய்வதற்காக, ஒன்றிய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய தோட்டக்கலை வாரியத் திட்டத்தின்  கீழ் ரூ.4.21 லட்சத்தை மானியமாகப் பெற்றுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் தேசிய தோட்டக்கலை வாரியத்தின் மானியங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள் விக்கு, ஒன்றிய அரசு அளித்த அதி காரப்பூர்வ பதிலில் இந்தத் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஏற்ெகனவே ஒன்றிய அமைச்சராக இருக்கும் பகீரத் சவுத்ரி என்பவர் தனது சொந்த வெள்ளரிப் பண்ணைக்காக ரூ.99 லட்சம் மானியம் பெற்றது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது மற்றொரு பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான லும்பாராம் சவுத்ரியும் இவ்வாறு மானியம் பெற்றுள்ளது பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *