சிங்காரப்பேட்டை, ஜூன் 15- கிருட்டினகிரி மாவட்டம் ஊற்றங்கரை ஒன்றியம் சிங்காரப் பேட்டை பேருந்து நிலையத்தில் முத்தமிழறிஞர் “டாக்டர் கலைஞர்” 103-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா – திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் 06.06.2026-மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி தலைமை வகித்தார்.
ஒன்றியச் செயலாளர் செ.சிவராஜ் அனைவரையும் வரவேற்றார்.
மாவட்டக் காப்பாளர் பழ.பிரபு, ஒன்றியத் தலைவர் அண்ணா அப்பாசாமி, மாவட்ட துணைத் தலைவர் வ.ஆறுமுகம், ஒன்றிய துணைத் தலைவர் காரப்பட்டு ப.இரமேசு ஆகியோர் முன்னிலை வகித்த னர்.
கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிட மணி தொடக்கவுரையாற்றினார்.
கூட்டத்தில் திமுக மாவட்டப் பொருளாளர் கா.ப.கதிரவன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன், மாவட்ட கழகக் காப்பாளர் பழ.பிரபு, மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முத்தமிழறிஞர்டாக்டர் கலைஞர் அவர்களின் காலத்தால் அழிக்க முடியாத வரலாற்று செய்திகளை எடுத்துக் கூறி பேசினர்.
நிறைவாக கழகச் சொற் பொழிவாளர் முனைவர் காஞ்சி பா.கதிரவன் கலந்துக்கொண்டு கலைஞர் அவர்கள் தனது இளமைப் பருவம் முதல் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா வழியில் திராவிட இயக்கத்தில் தடம் மாறாமல் பயணித்து திமுகவின் தலைவராக 50 ஆண்டுகள் தலைமை ஏற்று நடத்தியவர், நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற வெற்றி நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர், 13 முறை சட்டன்ற உறுப்பினர், 5 முறை தமிழ்நாடு முதலமைச்சர் என்ற சரித்திர சாதனைப்படைத்திட்ட தமிழ்நாட்டின் நவீன சிற்பி டாக்டர் கலைஞர் அவர்கள். சுயமரியாதை, சமூகநீதி, பகுத்தறிவு, சமத்துவம் என்ற இலட்சிய நோக்கோடு தமிழ்நாடு முழுவதும் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரங்களை உருவாக்கி அனைத்து சமூக மக்களும் சமமாக வாழ வழிவகுத்த வரலாற்று நாயகர் டாக்டர் கலைஞர் அவரை தொடர்ந்து திராவிட மாடல் ஆட்சியின் சரித்திரச் சாதனை படைத்தவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை எடுத்துக் கூறி சிறப்பு ரையாற்றினார்.
ஊற்றங்கரை ஒன்றிய திமுக செயலாளர்கள் எஸ்.குமரேசன், இரஜினி செல்வம், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கே.கிருஷ்ணமூர்த்தி, பேரூர் கழக செயலாளர் தீபக் (எ) பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட இளைஞரணித் தலைவர் சீனிமுத்து. இராஜேசன், பொதுக்குழு உறுப்பினர் கி.முருகேசன், மாவட்ட தொழிலாளரணித் தலைவர் சி.வெங்கடாசலம், போச்சம் பள்ளி கா.ஞானசேகரன், ஞா. சுதன் உள்பட கழக, திமுக நிர்வாகிகளும் தோழர்களும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியில் ஒன்றிய இளைஞரணித் தலைவர் கோ.சரவணன் நன்றி கூறினார்.
