கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 14.6.2026

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மாணவர்களின் பிரச்சினையை முன்னிறுத்தி,  நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்த முடிவு. ராஜஸ்தான் கோட்டாவில் ஜூன் 17இல் ராகுல் தலைமையில் போராட்டம்;

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘இனி எங்கே செல்வது?’: ரத்து செய்யப்பட்ட தேர்வால் ஏற்படும் பதற்றம், கோபம் மற்றும் இழப்புகள்: லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு, வினாத்தாள் கசிவு அல்லது பணி நியமனத் தேர்வு ரத்து என்பது வெறும் நிர்வாகத் தோல்வி மட்டுமல்ல. இது பல ஆண்டுகால தயாரிப்பை நிச்சயமற்ற நிலைக்கு தள்ளுவது, குடும்பத்தாரின் அழுத்தம் அதிகரிப்பது, பதற்றம், சுய சந்தேகம் மற்றும் திறமை மட்டுமே இனி போதுமானதாக இருக்காது என்ற உணர்வு மேலோங்குவது போன்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்,

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ராமர் கோவில் நன்கொடை விவகாரத்தில் சர்ச்சை: அயோத்தி ராமர் கோவில் நன்கொடை நிதியிலிருந்து சுமார் 7 கோடி ரூபாய் முறைகேடாகக் கையாளப்பட்டதாக கூறப்படும் விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது; இந்நிலையில், அயோத்தியின் ருடவுலி (RUDAULI) பகுதியில் உள்ள கோயில் ஊழியர் ஒருவரின் வீட்டில் இருந்து 10 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரையிலான தொகையை காவல்துறையினர் மீட்டனர்.

தி இந்து:

* தவெக (TVK) பாஜக-வின் நகலைப் போல செயல் படுகிறது: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய், அதிமுக எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது, தனது சொந்த அரசாங்கத்தின் மீதோ அல்லது அதற்கு ஆதரவளித்த கட்சிகளின் மீதோ அவருக்கு நம்பிக்கை இருக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது என கனிமொழி தலைமையிலான கட்சியின் மகளிர் அணி ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசுகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

தி டெலிகிராப்:

* மாணவர்கள் மற்றும் ‘தோல்வி அடைந்த’ அமைச்சர் – இவர்களில் ஒருவரை பிரதமர் மோடி தேர்ந்தெடுக்க வேண்டும்: அமிர்தசரஸ் போராட்டத்தில் சிஜேபி (CJP) நிறுவனர் திப்கே எச்சரிக்கை. “நீட் மற்றும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு நீதி வழங்குவதே முக்கிய நோக்கம். பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும். வினாத்தாள் கசிவு சம்பவங்கள் தொடரக்கூடாது,” என்று கூடியிருந்தவர்களிடம் திப்கே கூறினார்.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *