அமெரிக்காவுடன் இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பில்லை: ஈரான் தகவல்

2 Min Read

தெஹ்ரான், ஜூன் 14- மத்திய கிழக்கு போரில் அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிகப் போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் அமைதி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது.

அணுசக்தி திட்டங்கள், ஹார்முஸ் நீரிணை உள்ளிட்ட விவகாரங்களில் உடன்பாடு எட்டப்படவில்லை. மேலும் கடந்த ஒரு வாரமாக அமெரிக்காவும், ஈரானும் ஒன்றுக்கொன்று தாக்குதல் களில் ஈடுபட்டன. இதனால் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் இன்று கையெ ழுத்தாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “ஒப்பந்தம் கையெழுத்தான உடனேயே, ஹார்முஸ் ஜலசந்தி அனைவருக்கும் திறந்துவிடப்படும். முந்தைய நிர்வாகங்கள் கொண்டிருந்த உறவை விட, ஈரானுடனான எங்கள் உறவு மிகவும் மாறுபட்டதாகவும் சிறப் பானதாகவும் உள்ளது.

எதிர்காலத்தில் நீண்ட காலத்திற்கு ஈரானுடனும், ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியத்துடனும் இணைந்து பணியாற்ற நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று நம்புகிறோம். ஒருவேளை அது அப்படி அமையாவிட்டால், எங்களிடம் ஒரு இறுதிக்கட்ட மாற்று வழி உள்ளது. அதை மீண்டும் ஒருபோதும் பயன்படுத்த வேண்டிய நிலை வராது என்று நம்புகிறோம்” என்று அதில் கூறியுள்ளார்.

இதனிடையே அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம் அடுத்த 24 மணி நேரத்திற்குள் (இன்று) இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்திருந்தார். ஒப்பந்தம் இறுதியானவுடன், மின்னணு முறையில் இரு நாடுகளும் கையெ ழுத்திட பாகிஸ்தான் ஏற்பாடுகளைச் செய்யும். இதைத் தொடர்ந்து, அடுத்த வாரம் இரு தரப்புக்கும் இடையே அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக் காவுடன் இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பில்லை என்றும் அடுத்த சில நாட்களில் இந்த ஒப்பந்தம் இறுதிசெய்யப்படும் எனவும் ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் உடனான ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட உள்ளதாகவும், இதை தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை உடனடியாக திறக்கப்படும் என டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *