வாசிங்டன், ஜூன் 15- அமெ ரிக்காவின் 250ஆவது ஆண்டு விழா மற்றும் அதிபர் டிரம்பின் 80ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, வெள்ளை மாளிகை வளாகத்தில் உலகப் புகழ்பெற்ற ‘யு.எப்.சி’ சண்டைப் போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையொட்டி வாசிங்டனில் உள்ள லிங்கன் நினைவிடத்தில் நடந்த வீரர்களின் அறி முக விழாவில் பங்கேற்க, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற உலக நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.
வழக்கு தள்ளுபடி
அப்போது கடும் நெருக்கடிகள் மத்தியில் ரசிகர்கள் தங்கள் ஆதரவு வீரர்களைக்காண குவிந்ததால் அந்த இடமே பரபரப்பாகக் காணப்பட்டது. இதற்காக சுமார் ரூ.500 கோடி (60 மில்லியன் டாலர்) செலவிடப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க பொது இடத்தை தனியார் வணிகப் போட்டிக்கு பயன்படுத்துவதாக கூறி தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இந்த மாபெரும் சண்டைப்போட்டிகள் நடைபெறுகின்றன.
