குனியமுத்தூர், ஜூன் 15- கோவை, குனியமுத்தூர் பகுதியில் 08.06.2026 அன்று கழக சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாள் பரப்புரைக் கூட்டம் மாவட்ட தலைவர் ம. சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலா ளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் அனை வரையும் வரவேற்றார்.

மாநகர தலைவர் தி.க.செந்தில்நாதன், மாவட்டத் துணைத் தலைவர் பழ.அன் பரசு, மாவட்ட மகளிரணி தலைவர் இரா.முத்துமணி, மாவட்ட மகளிரணிச் செயலாளர் ப.கலைச்செல்வி, பேராசிரியர் மு.தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப்பு ரையாற்றினார்.
குனியமுத்தூர் பகுதி கழகச் செயலாளர் தி.மு.க, சி.லோகநாதன், சுகுணாபுரம் பகுதி கழக செயலாளர் தி.மு.க, அ.சிவசக்தி, ஜெயந்தி வடக்கு மாவட்டச் செயலாளர் தி.மு.க, பொன். இளஞ்சேரன் 93ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர், உதயநிதி பாபு 87ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர், எஸ்.செந்தில்குமார் 88ஆவது மாமன்ற உறுப்பினர், மகாலிங்கம் 86ஆவது வட்ட செயலாளர் திமுக, இல.கிருஷ்ணமூர்த்தி பொதுக்குழு உறுப்பினர், இரா.வெங்கடாசலம் மாவட்ட தொழிலாளரணிச் செயலாளர், யாழ்.வெங்கடேஷ் மாநகரஅமைப்பாளர், தா.சூசைராஜ் பகுத்தறிவாளர் கழகம், பா.ஜெயக்குமார் பகுதி கழக செயலாளர், வடவள்ளி பகுதி செயலாளர் வி.எம்.சி ராஜசேகர், பீளமேடு பகுதி செயலாளர் ரமேஷ், பகுத்தறிவாளர் கழகம் அக்ரி நாகராஜ், கவுதமன், வெற்றி செல்வம், முத்து கணேஷ், கணேசன், மற்றும் இயக்கத் தோழர்களும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர். இறுதியாக குனியமுத்தூர் பகுதி செயலாளர் வே.தமிழ் முரசு நன்றி தெரிவித்தார்.
