கோவையில் கொட்டும் மழையிலும் நடைபெற்ற கலைஞர் பிறந்த நாள் விழா!

1 Min Read

குனியமுத்தூர், ஜூன் 15- கோவை, குனியமுத்தூர் பகுதியில் 08.06.2026 அன்று கழக சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாள் பரப்புரைக் கூட்டம் மாவட்ட தலைவர் ம. சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலா ளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் அனை வரையும் வரவேற்றார்.

திராவிடர் கழகம்

மாநகர தலைவர் தி.க.செந்தில்நாதன், மாவட்டத் துணைத் தலைவர் பழ.அன் பரசு, மாவட்ட மகளிரணி தலைவர் இரா.முத்துமணி, மாவட்ட மகளிரணிச் செயலாளர் ப.கலைச்செல்வி, பேராசிரியர் மு.தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப்பு ரையாற்றினார்.

குனியமுத்தூர் பகுதி கழகச் செயலாளர் தி.மு.க, சி.லோகநாதன், சுகுணாபுரம் பகுதி கழக செயலாளர் தி.மு.க, அ.சிவசக்தி, ஜெயந்தி வடக்கு மாவட்டச் செயலாளர் தி.மு.க, பொன். இளஞ்சேரன் 93ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர், உதயநிதி பாபு 87ஆவது வார்டு  மாமன்ற உறுப்பினர், எஸ்.செந்தில்குமார் 88ஆவது மாமன்ற உறுப்பினர், மகாலிங்கம் 86ஆவது வட்ட செயலாளர் திமுக, இல.கிருஷ்ணமூர்த்தி பொதுக்குழு உறுப்பினர், இரா.வெங்கடாசலம் மாவட்ட தொழிலாளரணிச் செயலாளர், யாழ்.வெங்கடேஷ் மாநகரஅமைப்பாளர், தா.சூசைராஜ் பகுத்தறிவாளர் கழகம், பா.ஜெயக்குமார் பகுதி கழக செயலாளர், வடவள்ளி பகுதி செயலாளர் வி.எம்.சி ராஜசேகர், பீளமேடு பகுதி செயலாளர் ரமேஷ், பகுத்தறிவாளர் கழகம் அக்ரி நாகராஜ், கவுதமன், வெற்றி செல்வம், முத்து கணேஷ், கணேசன், மற்றும் இயக்கத் தோழர்களும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர். இறுதியாக குனியமுத்தூர் பகுதி செயலாளர் வே.தமிழ் முரசு நன்றி தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *