டில்லி, ஜூன் 11 நாடு முழுவதும் வாகன எரிபொருள் விலையைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தவும் ஒன்றிய அரசு ஒரு முக்கிய அதிரடி முடிவை எடுத்துள்ளது. 20 விழுக்காட்டிற்கும் மேல் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலுக்கான கலால் வரியை மத்திய அரசு தற்போது முற்றிலும் ரத்து செய்துள்ளது.
வரி விலக்கு விவரம்: 22 சதவீத, 25 சதவீத, 27 சதவீத, மற்றும் 30 சதவீத, எத்தனால் கலந்த பெட்ரோல் வகைகளுக்கு விதிக்கப்பட்டு வந்த கலால் வரியை மத்திய அரசு முழுமையாக நீக்கியுள்ளது. அரசின் இந்த அதிரடி வரிச் சலுகை காரணமாக, சந்தையில் எத்தனால் கலந்த ‘E30’ பெட்ரோலின் விலை இனி வரும் நாட்களில் படிப்படியாகக் குறையத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 30 சதவீத, எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலின் விலை லிட்டருக்கு அதிகபட்சமாக ரூ. 11.90 வரை குறைவதற்குக் கூடுதல் வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒன்றியஅரசின் இந்த அதிரடி நடவடிக்கை, வாகன ஓட்டிகளுக்குப் பெரும் நிம்மதியை அளிப்பதோடு, மாற்று எரிபொருள் பயன்பாட்டை இந்தியாவில் கணிசமாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
