எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு கலால் வரி முற்றிலும் ரத்து: லிட்டருக்கு ரூ.11.90 வரை குறைய வாய்ப்பு!

டில்லி, ஜூன் 11 நாடு முழுவதும் வாகன எரிபொருள் விலையைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தவும் ஒன்றிய அரசு ஒரு முக்கிய அதிரடி முடிவை எடுத்துள்ளது. 20 விழுக்காட்டிற்கும் மேல் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலுக்கான கலால் வரியை மத்திய அரசு தற்போது முற்றிலும் ரத்து செய்துள்ளது.

வரி விலக்கு விவரம்: 22 சதவீத, 25 சதவீத, 27 சதவீத, மற்றும் 30 சதவீத, எத்தனால் கலந்த பெட்ரோல் வகைகளுக்கு விதிக்கப்பட்டு வந்த கலால் வரியை மத்திய அரசு முழுமையாக நீக்கியுள்ளது.  அரசின் இந்த அதிரடி வரிச் சலுகை காரணமாக, சந்தையில் எத்தனால் கலந்த ‘E30’ பெட்ரோலின் விலை இனி வரும் நாட்களில் படிப்படியாகக் குறையத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 30 சதவீத, எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலின் விலை லிட்டருக்கு அதிகபட்சமாக ரூ. 11.90 வரை குறைவதற்குக் கூடுதல் வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒன்றியஅரசின் இந்த அதிரடி நடவடிக்கை, வாகன ஓட்டிகளுக்குப் பெரும் நிம்மதியை அளிப்பதோடு, மாற்று எரிபொருள் பயன்பாட்டை இந்தியாவில் கணிசமாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *