சென்னை, மே 28 சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சுப்புபிள்ளை தோட்டத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சுமார் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏறத்தாழ 2,700 புதிய குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டன. இக்குடி யிருப்புகள் கடந்த மார்ச் மாதம் அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் முறைப்படி திறந்து வைக்கப்பட்டன. எனினும், அதைத்தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்ட காரணத்தினால், பயனாளி களுக்கு வீடுகளை ஒதுக்கும் பணிகள் தற்காலிகமாக தடைபட்டிருந்தன.
எழுந்துள்ள புதிய சர்ச்சை
தற்போது புதிய ஆட்சி அமைந்துள்ள சூழ்நிலையில், கட்டி முடிக்கப்பட்ட இந்த வீடுகளை ஒதுக்கீடு செய்வதில் ஜாதி பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. பொதுவாக, வாரிய விதி முறைகளின்படி இதுபோன்ற புதிய குடியிருப்புகளில் உள்ள வீடுகள் எவ்வித பாகுபாடுமின்றி ‘குலுக்கல் முறை’ மூலமாகவே பயனாளி களுக்கு ஒதுக்கப்படுவது வழக்கம்.
கடந்த திமுக ஆட்சியின் போதே, அப்பகுதியில் வசிக்கும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர், பட்டியலின மக்கள் குடி யிருக்கும் குடியிருப்புகளில் தங்களுக்கு வீடு வேண்டாம் என்றும், தங்களுக்கு என்று ஒரு குறிப்பிட்ட ‘ப்ளாக்கை’ தனியாக ஒதுக்கித் தர வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், மேனாள் சென்னை மாநகராட்சி மேயரும்/அமைச் சருமான மா. சுப்பிர மணியன் அந்த கோரிக்கையை திட்டவட்டமாக மறுத்தி ருந்தார்.
இந்நிலையில், புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சைதாப் பேட்டை தொகுதி தவெக சட்ட மன்ற உறுப்பினர் அருள் பிரகாசம் வழியாக, அதே பழைய கோரிக்கை மீண்டும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தி னருக்கு மட்டும் தனியாக குலுக்கல் நடத்தி, அவர்களை ஒரு குறிப்பிட்ட ப்ளாக்கில் குடியேற்றுவதற்கான முயற் சிகள் திரைமறைவில் நடப்பதாக அங்குள்ள குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இத்தகைய செயல்முறைகள் “ஜாதிவாதிகளின் நவீன தீண்டாமை” என்று அப்பகுதி மக்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேனாள் அமைச்சர்
மா. சுப்பிரமணியன்
கடும் கண்டனம்
மா. சுப்பிரமணியன்
கடும் கண்டனம்
அரசு குடியிருப்பு வழங்குவதில் ஜாதி பாகுபாடு காட்டப்படுவதாக எழுந்துள்ள இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு மேனாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். சமத்துவ அடிப்படையில் கட்டப்பட்ட குடியிருப்புகளில் ஜாதியப் பிரிவினை யைத் தூண்டும் முயற்சிகள் முறி யடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இவ்விவ காரம் சைதாப்பேட்டை பகுதியில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
