காஞ்சிபுரம், ஏப்.29 காஞ்சிபுரம் வரதரானர் பெருமாள் திருக்கோவிலில் பெருமாளின் கருவறை மண்டபத்தில் அமர்ந்து வடகலை தாதாச்சாரியாரி பிரிவினர் ‘ஸ்தோத்திரப் பாடல்’ பாடுவதை வழக்கமாகவும் உரிமையாகவும் கொண்டுள்ளனர். இந்த நிலையில் வடகலை தாதாச்சாரியார் பிரிவினர் ‘ஸ்தோத்திரப் பாடல்’ பாடுவதில் தங்களுக்கும் உரிமை வழங்க வேண்டும் எனக் கேட்டு தென்கலை அய்யங்கார் பிரிவினர் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் நிலவும் இந்தப் பூசல், இன்று நேற்று தொடங்கியதல்ல; இது நூற்றாண்டுகள் கடந்த கூத்து ஆகும்
பெருமாளைப் பற்றிப் பாடும் ‘ஸ்தோத்திரப் பாடல்’களை பாடுவதில் தங்களுக்குத்தான் முன்னுரிமை என்று இரு தரப்பும் மோதிக்கொண்டது, வழிபாட்டிற்கு வந்த பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் பிரிவி கவுன்சில் வரை சென்ற வழக்கு
காஞ்சிபுரம் வரதராஜா பெருமாள் கோவில் வழிபாட்டு முறைகளில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே நிலவும் இந்தப் போட்டி ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கும் மேலான சட்டப் போராட்டத்தைக் கொண்டது.
பிரிவி கவுன்சில் தீர்ப்பு (1800-களின் பிற்பகுதி): இந்தியாவிலிருந்து லண்டனுக்கு கொண்டு செல்லப் பட்ட இந்த வழக்கை விசாரித்த பிரிட்டிஷ் அரசின் பிரிவி கவுன்சில் (Privy Council), 19-ஆம் நூற்றாண் டிலேயே சில முக்கிய தீர்ப்புகளை வழங்கியது.
இந்தத் தீர்ப்புகளின்படி, வரதராஜப் பெருமாள் கோவிலில் வடகலை சம்பிரதாயமே பிரதான மானது என்றும், அங்குள்ள நிர்வாகம் மற்றும் வேத பாராயணங்களில் வடகலை தாதாச்சாரியார் பிரிவின ருக்கே முன்னுரிமை உண்டு என்றும் அங்கீகரிக்கப்பட்டது.
தென்கலையினரின் நிலை: தென்கலைப் பிரிவினர் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே தங்கள் பாசுரங்களை இசைக்க அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், “எந்தப் பாடலை முதலில் பாடுவது?” மற்றும் “யார் தலைமை தாங்குவது?” என்பதில் இரு பிரிவினருக்கும் இடையே தொடர் மோதல்கள் நீடித்து வருகின்றன.
வடகலைப் பிரிவினர் ஸ்தோத் திரப் பாடல்களைப் பாடத் தொடங்கினர். அப்போது, தென்கலை பிரிவினர் தங்களுக்கும் அங்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
“பெருமாளின் திருஅவதார நன்னாளில், அவர் புகழைப் பாடுவதில் வேற்றுமை காட்டி, கருவறை முன்பே காவல்துறையினர் குவியும் அளவிற்குச் சென்றது பக்தர் களின் மனதைப் புண்படுத்தியுள்ளது.” என தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சிலர் வேதனையுடன் தெரிவித்தனர்.
தொடர் வாக்குவாதம் காரணமாகக் கோவிலில் பதற்றம் நிலவியதைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்க ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பல ஆண்டு களாகத் நீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தபோதிலும், “சம்பிரதாயம்” மற்றும் “உரிமை” என்ற பெயரில் நடக்கும் இந்த ஈகோ போர், காஞ்சி புரத்தில் மீண்டும் ஒரு கறையை ஏற்படுத்தியுள்ளது.
“வடகலை vs தென்கலை” மோதல் என்பது வெறும் உரிமைப் போர் மட்டுமல்ல, அது பிரிட்டிஷ் காலம் தொட்டு இன்று வரை தீர்க்கப்படாத கூத்தாக உள்ளது.

