ஜெய்ப்பூர், மே 13 ‘நீட்’ தேர்வு நடை பெறுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்ன தாகவே வினாத்தாள்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்வு நடப்பதற்கு 2 நாள்களுக்கு முன்பு ஒரு வினாத்தாள் ரூ.5 லட்சம் வரை விற்கப்பட்டுள்ளது.
திடீர் விலை வீழ்ச்சி: தேர்வுக்கு முந்தைய நாள் இரவு, அதே வினாத்தாள் வெறும் ரூ.30 ஆயிரம் என்ற விலைக்கு கைமாறியதாகக் கூறப்படுகிறது. இந்த முறைகேடு தொடர்பாக ராஜஸ் தான் மற்றும் மகாராட்டிரா மாநில காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். வினாத்தாள் கசிவின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்களைப் பிடிக்க பல்வேறு கோணங்களில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
முக்கிய குற்றவாளி கைது
இந்த விவகாரத்தில் மகாராட்டிர மாநிலம் நாசிக் பகுதியில் வினாத்தாளைக் கசியவிட்டதாகக் கருதப்படும் முக்கியக் குற்றவாளியை காவல்துறையினர் அதிரடி யாகக் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் இந்த மோசடி வலைப்பின்னல் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய அளவில் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் இத்தகைய முறைகேடுகள் புகாராகி வருவது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
