‘நீட்’ தேர்வு அதிர்ச்சி : 2 நாள்களுக்கு முன்பே ரூ.5 லட்சத்திற்கு விற்கப்பட்ட வினாத் தாள்!

ஜெய்ப்பூர், மே 13 ‘நீட்’ தேர்வு நடை பெறுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்ன தாகவே வினாத்தாள்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  தேர்வு நடப்பதற்கு 2 நாள்களுக்கு முன்பு ஒரு வினாத்தாள் ரூ.5 லட்சம் வரை விற்கப்பட்டுள்ளது.

திடீர் விலை வீழ்ச்சி: தேர்வுக்கு முந்தைய நாள் இரவு, அதே வினாத்தாள் வெறும் ரூ.30 ஆயிரம் என்ற விலைக்கு கைமாறியதாகக் கூறப்படுகிறது. இந்த முறைகேடு தொடர்பாக ராஜஸ் தான் மற்றும் மகாராட்டிரா மாநில காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். வினாத்தாள் கசிவின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்களைப் பிடிக்க பல்வேறு கோணங்களில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

முக்கிய குற்றவாளி கைது

இந்த விவகாரத்தில் மகாராட்டிர மாநிலம் நாசிக் பகுதியில் வினாத்தாளைக் கசியவிட்டதாகக் கருதப்படும் முக்கியக் குற்றவாளியை காவல்துறையினர் அதிரடி யாகக் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் இந்த மோசடி வலைப்பின்னல் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய அளவில் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் இத்தகைய முறைகேடுகள் புகாராகி வருவது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *