‘‘தமிழெனும் ஆயுதமேந்தி
இனமானம் உரைத்தவர்!’’
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
சென்னை, ஏப்.29 புரட்சிக்கவி ஞர் பாரதிதாசனின் பிறந்தநாளை யொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு நெகிழ்ச்சியான முறையில் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:
இனமானம் காத்த கவிஞர்
‘‘தமிழெனும் ஆயுதமேந்தி இனமானம் உரைத்த புரட்சிக்கவிஞர் புகழ் வாழியவே!’’ எனப் போற்றி யுள்ள முதலமைச்சர், பாரதிதாசனின் கவிதைகள் தமிழினத்தின் உணர்ச்சியைத் தூண்டும் வலிமை கொண்டவை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழின் இனிமை
தமிழின் இனிமையையும், அதே வேளையில் தமிழர்கள் வாழ்வில் உயர்வதற்கான வழிகளையும் தனது தீந்தமிழ்க் கவிதைகளின் வாயிலாக உலகிற்குப் பறைசாற்றியவர் புரட்சிக்கவிஞர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
புரட்சிக்கவிஞரி்ன உறுதிமிக்கத் தமிழ் வரிகள், தமிழினத்திற்கு என்றும் ஒரு திண்ணமான ஒளியாக இருந்து நல்வழிப்படுத்தும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
பாரதிதாசனின் தமிழ் உணர் வையும், சமூகச் சீர்திருத்தக் கருத்து களையும் போற்றும் வகையில் முதலமைச்சரின் இந்தப் பதிவு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.ஸ்டாலின் புகழாரம்!

