காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

1 Min Read

சென்னை, ஏப். 28- காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 50ஆவது கூட்டத்தை, மாநிலங்களில் புதிய அரசுகள் பதவியேற்கும் வரை தள்ளிவைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி நீரை தமிழ்நாடு, கரு நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தடையின்றி பகிர்ந்து கொள்வதற்காக கடந்த 2018ஆம் ஆண்டு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டன.

இதுவரை 49 முறை இக்குழு கூடி நதி நீர் தொடர்பான பிரச்சினைகளை விவாதித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டில்லியில் நாளை (29.4.2026) 50ஆவது கூட்டம் நடை பெற உள்ளது. இதில் பங்கேற்க நான்கு மாநில அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை

தற்போது தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்து, வாக்கு எண்ணிக்கைக்காக (மே 4) காத்திருக்கும் சூழல் நிலவுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் உள்ளன.

மாநிலங்களில் தற்போது காபந்து அரசுகளே பதவியில் இருக்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசுகள் இன்னும் பொறுப்பேற்கவில்லை.

இத்தகைய சூழலில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாமல் வெறும் அதிகாரிகளை மட்டும் வைத்து இக்கூட் டத்தை நடத்துவது ஜனநாயக ரீதியாகப் பொருத்தமற்றது என வீரபாண்டியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, 29ஆம் தேதி நடைபெறவிருக்கும் கூட்டத்தை உடனடியாகத் தள்ளிவைக்க வேண்டும். தேர்தல் முடிவுகள் வெளியாகி, மாநிலங்களில் புதிய அரசுகள் பதவியேற்ற பிறகு இக்கூட்டத்தை நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *