கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 20.4.2026

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* சென்னைக்கு திமுக சிறப்பு தேர்தல் அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதில் அனைத்து மக்களுக்கும் தூய்மையான குடிநீர், அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் அதி ஒளி மின் விளக்குகள் அமைக்கப்படும். 1,000 புதிய மினி பேருந்துகள் இயக்கப்படும். மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் 2028ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். 20,000 உயர் ஊதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

*ஆடு போர்வையில் ஓநாய் போல பாஜக அரசு பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவில் தொகுதி மறுவரையறையை கொண்டு வந்தது, கனிமொழி காட்டம்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பெண்கள் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றுவதில் மோடி அரசுக்கு எந்தவித அக்கறையும் இல்லை என்பதைத் தான் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது காட்டுகிறது என்கிறது தலையங்கம்.

* மோடி அரசின் தொகுதி மறுவரையறை மசோதா, தமிழ் நாட்டின் நலனை பாதிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* பெண்களுக்கான இட ஒதுக்கீடு — மோடியின் தோல்வி அடைந்த ‘மண்டல் தருணமா’? என்கிறார் கட்டுரையாளர் மூத்த பத்திரிக்கையாளர் பாரத் பூஷன்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* கோயில் உள்ளே நுழைய மாட்டு மூத்திரம் குடிப்பது கட்டாயம்.: ‘நம்பிக்கையற்றவர்களை வடிகட்ட’ — கங்கோத்ரி கோவிலில் பஞ்சகவ்யம் உட்கொள்வது கட்டாயமாக்கப்படுகிறது கங்கோத்ரி கோவில் நிர்வாகக் குழு, முதல் முறையாக, கோயிலுக்குள் நுழைவதற்கு பஞ்சகவ்யம்—பசுவின் சிறுநீர், சாணம், நெய், பால் மற்றும் தயிர் ஆகியவற்றின் கலவை—உட்கொள்வதை கட்டாயமாக்கியுள்ள நிலையில், யமுனோத்ரி கோயில் அனைவருக்கும் திறந்தே இருக்கும்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஆந்திர பிரதேசம் சந்திரபாபு ஆட்சியில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் (MGNREGA) மனித-வேலை நாட்கள் 23.2 சதவீதம் சரிவு: கிராமப்புற வேலை வாய்ப்புகள் பாதிப்பு. வேலைவாய்ப்புப் அட்டைகளில் 4.58 லட்சம் அட்டைகளும், தொழிலாளர்களில் 12.33 லட்சம் பேரும் நிகர இழப்பை சந்தித்துள்ளனர் என்கிறது லிப்-டெக் இந்தியா அமைப்பின் அறிக்கை.

தி இந்து:

* தமிழ்நாட்டில் திமுகவை வீழ்த்துவதற்காக, தொகுதி மறுவரையறையை (DELIMITATION) கொண்டுவருவதற்கு ஒரு தந்திரமாகவே பிரதமர் நரேந்திர மோடிக்கு மகளிர் இடஒதுக்கீடு தேவைப்பட்டது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே  குற்றச்சாட்டு.

* ‘மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை எவ்வித நிபந்தனைகளும் இன்றி அமல்படுத்துங்கள்’, மகளிர் அமைப்புகள் மற்றும் தலைவர்களின் கூட்டமைப்பான ‘தேசிய மகளிர் இடஒதுக்கீட்டுக் கூட்டணி’ (NATIONAL COALITION FOR WOMEN’S RESERVATION), வலியுறுத்தல்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ‘கோழைத்தனம், இரட்டை வேடம்’: மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்த பிரதமர் மோடியின் குற்றச்சாட்டை மம்தா நிராகரித்தார். மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி “நாட்டைத் திசைதிருப்ப” (MISLEAD) முயன்றது “மிகவும் வாய்ப்புக் கேடானது” என்று அவர் கூறினார்.

தி டெலிகிராப்:

*மோடி ‘முதலைக் கண்ணீர்’ வடிப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு; தோற்கடிக்கப்பட்டது தொகுதி வரையறை மசோதா, மகளிர் மசோதா அல்ல தற்போதைய மக்களவை பலத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த காங்கிரஸ் கோரிக்கை.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *