தி இந்து:
* ’சர்னா’ மத தனி அடையாளம் வேண்டும்: 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பழங்குடியினரின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, அவர்களை மற்ற மதங்களை பின்பற்றுபவர்களிடம் இருந்து வேறுபடுத்தி அடையாளம் காண சர்னா மதச் சட்டம் அவசியம், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கடிதம்
தி டெலிகிராப்:
* பத்திரிகைச் சுதந்திரம் குறித்து பாஜக-ஆர்எஸ்எஸ் மீது மல்லிகார்ஜுன கார்கே தாக்கு; ஏற்கனவே கொண்டுள்ள கட்டுப்பாட்டில் திருப்தியடையாத பாஜக-ஆர்எஸ்எஸ் அரசு, முழுமையான ஆதிக்கத்தை நோக்கமாகக் கொண்டு, சமூக ஊடகங்களை மவுனமாக்கும் முயற்சியில் தற்போது அதன் பிடியை மேலும் இறுக்க முற்படுகிறது என்று கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
* உ.பி. இடைத்தேர்தலில் பாஜக-தேர்தல் ஆணையத் தின் ‘வியூக ரீதியான பணியமர்த்தல்’ வங்காளத் தேர்தலிலும் எதிரொலிப்பதாக அகிலேஷ் குற்றச்சாட்டு; மமதாவின் வெற்றிக்கு ஆதரவு
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பாஜக முன்னாள் எம்.பி. மற்றும் முன்னாள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை முன்வைத்த ஆறு பெண் மல்யுத்த வீராங்கனைகளில் தானும் ஒருவர் என மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா
