கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 26.5.2026

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* வேலுமணி அணியைச் சேர்ந்த 3 அதிமுக எம்எல்ஏக்கள் திடீர் பதவி விலகல்: தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அறையில் தவெகவில் இணைந்து உறுப்பினர் அட்டை பெற்றதால் சர்ச்சை: மேலும் 7 எம்எல்ஏக்களுக்கு பேரம். எதிர்க்கட்சிகள் கண்டனம்.

டெக்கான் கிரானிக்கல்,  அய்தராபாத்:

* 4ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு: இரண்டு வாரங்களுக்கு உள்ளாகவே பெட்ரோல், டீசல் விலை நான்காவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் ஒரு லிட்டருக்கு ரூ.7.5 உயர்த்தப்பட்டுள்ளது.

* இன்னமும் பாடம் கற்கவில்லையா? நீட் விவகாரத்தில் தேசியத் தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி. ஒன்றிய அரசு, சிபிஅய் பதிலளிக்கவும் அறிவிக்கை.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.-வுக்கு எதிரான மதச்சார்பற்ற சக்திகளிடையே ஒற்றுமையை வலுப்படுத்த காங்கிரஸின் அணுகுமுறை “உதவிகரமாக இல்லை” என சி.பி.எம். பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி விமர்சனம்.

* தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொலைகள்: மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடத்தில் பதின் வயது இளைஞர் கொலை.

தி இந்து:

* த.வெ.க. குதிரை வேகத்தில் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது. இதன் மூலம், ‘தூயசக்தி’ என்று சுய தம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டு இருக்கிறார்கள். காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தி டெலிகிராப்:

* தேர்வு மய்யத்தில் அதிகப்படியான ஒதுக்கீடு காரணமாக கான்பூரில் எஸ்.எஸ்.சி. ஜி.டி (SSC-GD) கான்ஸ்டபிள் தேர்வு ரத்து.மகாராஜ்பூர், பூர்வாமீரில் உள்ள சிறீமதி ராம்கலி இக்பால் பகதூர் ஆன்லைன் மய்யத்தில் இந்த இடையூறு ஏற்பட்டது. ஒரே நேரத்தில் 399 தேர்வர்கள் மட்டுமே அமரக்கூடிய அந்த மய்யத்தில், ஒவ்வொரு நேரத்திலும் 819 தேர்வர்களுக்கு அனுமதிச் சீட்டுகளை வழங்கியதால், பெரும் கூட்ட நெரிசலும் குழப்பமும் ஏற்பட்டது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ‘பெண்கள் கல்வியைத் துறந்துவிட்டு வீட்டு வேலைகளில் ஈடுபடக்கூடாது’: கழிப்பறைகள் மற்றும் சானிட்டரி நாப்கின்கள் கிடைப்பதை உறுதி செய்ய உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *