பக்தியின் பலன் இதுதானோ? கோயிலுக்குச் சென்ற புதுமண இணையர் கார் விபத்தில் மரணம்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஹாவேரி, மார்ச் 2– கருநாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் இணையருக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்று முடிந்தது.

திருமணத்திற்குப் பிந்தைய சடங்குகளின் ஒரு பகுதியாக, தங்களது புதிய காரில் குலதெய்வம் கோயிலுக்குச் சென்று சிறப்பு பூஜை செய்ய முடிவு செய்தனர். அதன்படி, கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, காரில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஹாவேரி அருகே கார் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்தக் கோர விபத்தில் பலத்த காயமடைந்த புதுமண இணையர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *