புகையில்லா அடுப்புத் திட்டம் ஏழைப் பெண்களை மீண்டும் அடுப்புப் புகைக்குள் தள்ளியதே பிரதமர் மோடியின் சாதனை! மார்ச் மாத சமையல் எரிவாயு பயன்பாடு 13 சதவீதம் கடும் வீழ்ச்சி!

1 Min Read

புதுடில்லி, ஏப்.22- இந்தியாவில் சமையல் எரிவாயுவின் (LPG) பயன்பாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு மார்ச் மாதத்தில் ஒட்டு மொத்த சமையல் எரிவாயு பயன்பாடு 13 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் விலை உயர்வு காரணமாக அனைத்துத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது:

வீட்டுப் பயன்பாடு: 8.1 சதவீதம் சரிவு. வணிகப் பயன்பாடு: 48 சதவீதம் சரிவு. தொழிற்சாலைப் பயன்பாடு: 75.5 சதவீதம் பெரும் சரிவு.

திட்டமிடாத அரசு – திண்டாடும் மக்கள்

வளைகுடா போர் போன்ற உலகளாவிய சூழல்களைக் கையாள்வதில் ஒன்றிய அரசு உரிய திட்டமிடல் இல்லாமல் செயல்படுவதே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

“புகையில்லா அடுப்புத் திட்டம் மூலம் பெண்களைக் காப்போம் என்று கூறிவிட்டு, தற்போது எரிவாயு விலையை விண்ணைத் தொடச் செய்ததன் மூலம், ஏழைப் பெண்களை மீண்டும் அடுப்புப் புகைக்குள் தள்ளியதே பிரதமர் மோடியின் சாதனையாக உள்ளது”

தேர்தல் வெற்றிகளில் மட்டுமே கவனம் செலுத்தும் ஒன்றிய அரசு, சாமானிய மக்களின் அத்தியாவசியத் தேவையான சமையல் எரிவாயுவின் தட்டுப்பாட்டையும் விலை உயர்வையும் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகக் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த சமையல் எரிவாயு பயன்பாடு வீழ்ச்சி என்பது வெறும் புள்ளிவிவரம் மட்டுமல்ல, இந்தியக் குடும்பங்களின் பொருளாதார நெருக்கடியின் வெளிப்பாடாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *