புதுடில்லி, ஜூன் 27 வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட ‘சிறப்பு தீவிரத் திருத்தப்பணி முன்னோடித் திட்டம்’ தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. தற்போது 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தப் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், நாடு முழுவதும் இதுவரை சுமார் 6 கோடி வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
