சென்னை, பிப்.24- தமிழ்நாட்டின் மொத்த 5.67 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்.அய்.ஆா்.) பிந்தைய வாக்காளா் இறுதிப் பட்டியல் நேற்று (23.2.2026) வெளியிடப்பட்டுள்ளது. இதனை தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.
வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியானாலும் பெயர் சேர்க்க அல்லது திருத்தங்கள் செய்ய தற்போதுகூட விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள்: 5,67,07,380.
ஆண்கள்: 2,77,38,925,
பெண்கள்: 2,89,60,838,
மூன்றாம் பாலினத்தவர்: 7,617.
வாக்காளர்கள் நீக்கம்: 74,07,207
தமிழ்நாட்டில் அக்.27 நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில் எஸ்அய்ஆருக்குப் பின் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடியாக குறைந்தது. அதில் மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு டிச.19 முதல் பிப்.10 ஆம் தேதி வரை பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய அவகாசம் தரப்பட்டது. பெயர் சேர்க்க, நீக்க அவகாசம் தரப்பட்ட நிலையில் படிவம் 6, மூலம் 27,53,796 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர்கள் தங்களது பெயர்கள் வாக்காளர் இறுதிப் பட்டியில் இடம்பெற்றுள்ளதா? என்பதை https://elections.gov.tn.in என்கிற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்
