சைக்கிள் ஓட்டி சென்னையை ரசிக்கலாம் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சிகாகோ, செப்.5 சைக்கிள் பயணம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், சிகாகோவில் சைக்கிள் ஓட்டிய காட்சிப் பதிவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார் மு.க.ஸ்டாலின் சைக்கிள் ஓட்டும் காட்சிப் பதிவு இணையத்தில் வைரலானதை அடுத்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி, சகோதரரே, எப்போது சென்னையில் நாம் ஒன்றாக சைக்கிள் ஓட்டுவோம் என நகைச்சுவையாக கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் ராகுல் காந்திக்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் சென்னைக்கு வரலாம். ஒன்றாக சைக்கிளிங் சென்று சென்னையை சுற்றுவோம் – சைக்கிள் ஓட்டிய பிறகு என் வீட்டில் சுவையான தென்னிந்திய மதிய உணவை ருசிப்போம். உங்களுக்கு தர வேண்டிய ‘ஸ்வீட் பாக்ஸ்’ என்னிடம் இன்னும் நிலுவையில் உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *