‘நீட்’ மறுதேர்வுக்கு தயாராகி வந்த குஜராத் மாணவர் தற்கொலை

1 Min Read

அகமதபாத், ஜூன் 19 குஜராத் மாநிலம் அகமதா பாத்தின் நியூ ராணிப் பகு தியைச் சேர்ந்தவர் காஹன் படேல். வயது 17. இவர் நீட் மறு தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (18.6.2026) அதி காலை அரிஸ்டோ ஆனந்தம் அடுக்கு மாடி குடியிருப்பின் 6ஆவது மாடியில் இருந்து குதித்து காஹன் படேல் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது தொடர்பாக சபர்மதி காவல் ஆய்வாளர் யுவராஜ்சிங் வகேலா கூறுகையில், “இந்தச் சம்பவம் அதிகாலை 2 அல்லது 3 மணியளவில் நடந்துள்ளது. ஆனால் எங்களுக்கு அதிகாலை 4:30 மணியளவில் தகவல் கிடைத்தது. இதுவரை தற்கொலைக் கடிதம் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. மாணவர் மன அழுத்தத்தில் இருந்தாரா என்பது உள்பட, இதற்கான காரணத்தை தற்போது உறுதிப்படுத்த முடியாது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.

எனினும் நீட் தேர்வு ரத்து செய்யப் பட்டதில் இருந்து காஹன் படேலின் போக்கில் மாற்றம் தெரிந்ததாக அண்டை வீட்டினர் கூறியுள்ளனர். மோடி அரசின் அலட்சியத்தால் வினாத்தாள் கசிவு ஏற்பட்டு மே 3 அன்று நடைபெற்ற நீட் தேர்வின் மறுதேர்வு ஜூன் 21 அன்று நடைபெறுகிறது. தேர்வுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள சூழலில்,ராஜஸ்தான், உத்தரகாண்ட், தமிழ்நாட்டைத் தொடர்ந்து குஜராத்திலும் நீட் மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிகழ்வு நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதான் பிஜேபி ஆளும் உத்தரப்பிரதேச ஆட்சியின் அவலம்

465 பள்ளிகள் இழுத்து மூடப்பட்டுள்ளன!

லக்னோ, ஜூன் 19 உத்தரப்பிரதேசம் முழுவதும் 465 பள்ளிகளின் அங்கீகாரத்தை உத்தரப்பிரதேச கல்வி வாரியம் ரத்து செய்துள்ளது. 2024-2025 மற்றும் 2025-2026 கல்வியாண்டுகளில் இந்தப் பள்ளிகளில் மாணவர்கள் யாரும் தேர்வுக்கு ஆஜராகாதது அல்லது வகுப்புகள் நடத்தப்படாததே இதற்கு காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *